Published:Updated:

`சுஷாந்த் சிங் உறவினர்கள் சொல்லும் கொலை குற்றச்சாட்டு’ -தாக்கல் செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை

சுஷாந்த் சிங்
சுஷாந்த் சிங்

மும்பையில் சுஷாந்த் சிங் உடலைக் கைப்பற்றிய மும்பை பந்த்ரா காவல் நிலைய அதிகாரிகள், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 3 மருத்துவர்கள் கொண்ட குழு, அவரது உடலை இன்று காலை பிரேதப் பரிசோதனை செய்தது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த சுஷாந்த், மும்பையில் தனியாக வசித்து வந்தார். அவரின் தந்தை பாட்னாவில்தான் வசித்து வருகிறார். சுஷாந்த் சிங்கின் சகோதரி சண்டிகரில் வசித்து வருகிறார்.

தோனியுடன் சுஷாந்த் சிங்
தோனியுடன் சுஷாந்த் சிங்

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கூட சுஷாந்த் தனது தந்தையை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி இருக்கிறார். அப்போது, கொரோனா குறித்து தந்தையிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி பேசியுள்ளார். தந்தையை சரியாக கவனித்துக் கொள்ளும்படி வீட்டில் பணி செய்யும் பெண்ணான லட்சுமி தேவியிடமும் கூறியுள்ளார். தொடர்ந்து, நேற்று மதியம் மும்பையிலிருந்து போன் என்றதும், மகனாகதான் இருக்கும் என்று நினைத்திருக்கிறார் சுஷாந்தின் தந்தை சிங். ஆனால், அந்தப்பக்கம் பேசியது மும்பை போலீஸின் குரல். மகனின் மரணச் செய்தி கேட்டு மயங்கி விட்டார் தந்தை.

`எனது 50 கனவுகள்... அம்மாவுடன் செய்துகொண்ட சத்தியம்’- `கனவுக்காரன்’ சுஷாந்த் சிங்

செய்தி கேட்டு உறவினர்கள் பாட்னாவில் உள்ள அவரது வீட்டின் முன்பு கூடிவிட்டனர். ஏ.என்.ஐ ஊடகத்திடம் பேசிய சுஷாந்தின் தாய் மாமா, ``நாங்கள் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொள்வார் என நினைக்கவில்லை. காவல்துறை இதைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும். இதில் ஏதோ மர்மம் இருப்பதாகத் தெரிகிறது. அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவே கருதுகிறோம்” என்றார்.

சுஷாந்த் சிங்கின் தாய் மாமா
சுஷாந்த் சிங்கின் தாய் மாமா

தொடர்ந்து பாட்னா வீட்டுக்கு வந்த ஜன் ஆதிகார் கட்சியின் தலைவர் பப்பு யாதவ், ``சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டார். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கோருகிறோம்” என்றார். இதனிடையே, இன்று காலை சுஷாந்த் உறவினர்கள் விமானம் மூலம் மும்பை புறப்பட்டனர். சுஷாந்த் சிங்கின் தந்தை, அவருடன் பி.ஜே.பி எம்.எல்.ஏ யும் சுஷாந்த் சிங்கின் உறவினருமான நிராஜ் குமார் சிங்கும் மும்பை செல்கிறார்.

எம்.எல்.ஏ நிராஜ் குமார் சிங் பேசுகையில், ``நாங்கள் இப்போது மும்பை புறப்படுகிறோம். சுஷாந்தின் இறுதிச் சடங்குகள் அங்கு நடைபெறும். அவர் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார் என்பதை இன்னும் எங்களால் நம்ப முடியவில்லை. தேவைப்பட்டால் இந்த விவகாரத்தில் விசாரணை கோருவோம்” என்றார்.

`சுஷாந்த் சிங் உறவினர்கள் சொல்லும் கொலை குற்றச்சாட்டு’ -தாக்கல் செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனை அறிக்கை

மும்பையில் சுஷாந்த் சிங் உடலைக் கைப்பற்றிய மும்பை பந்த்ரா காவல் நிலைய அதிகாரிகள், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 3 மருத்துவர்கள் கொண்ட குழு, அவரது உடலை இன்று காலை பிரேதப் பரிசோதனை செய்தது. பின்னர் அது தொடர்பான அறிக்கையை பந்த்ரா காவல்நிலையத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் , சுஷாந்த் சிங் மரணத்துக்கு காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, `தூக்கு மாட்டிக்கொண்டதன் காரணமாக, ஏற்பட்ட மூச்சுத் திணறல்’ மரணத்துக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவலை டி.சி.பி அபிஷேக் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு