Published:Updated:

நெல்லை: `போலீஸ் அடித்ததில் இளைஞர் மரணம்?' - உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்

சர்ச்சைக்குரிய வகையில் மரணம் அடைந்த சண்முகம்

நெல்லை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த இளைஞரின் மரணத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அவரது உடலில் விபத்துக்கான காயங்கள் எதுவும் இல்லாததால் விபத்தில் உயிரிழந்ததாக போலீஸார் கூறுவதை உறவினர்கள் ஏற்க மறுக்கிறார்கள். 

நெல்லை: `போலீஸ் அடித்ததில் இளைஞர் மரணம்?' - உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்

நெல்லை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த இளைஞரின் மரணத்தில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அவரது உடலில் விபத்துக்கான காயங்கள் எதுவும் இல்லாததால் விபத்தில் உயிரிழந்ததாக போலீஸார் கூறுவதை உறவினர்கள் ஏற்க மறுக்கிறார்கள். 

Published:Updated:
சர்ச்சைக்குரிய வகையில் மரணம் அடைந்த சண்முகம்

நெல்லை புறநகர் பகுதியான நடுவக்குறிச்சியை சேர்ந்த கூலி தொழிலாளியான சண்முகம் என்பவர் 25-ம் தேதி இரவு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி  27-ம் தேதி காலை இறந்துவிட்டார். 

நெல்லை அரசு மருத்துவமனை
நெல்லை அரசு மருத்துவமனை

ஹைவே பேட்ரோல் வாகனத்தில் எஸ்.ஐ-யாகப் பணிபுரியும் ஐயப்பன் என்பவர் பைக்கில் வந்தபோது, சாலையைக் கடக்க முயன்ற சண்முகம் மீது மோதியதாகவும் அதில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாகவும் போலீஸார் தெரிவிக்கிறார்கள். ஆனால், இது தொடர்பாக வழக்கு எதுவும் அப்போது பதியப்படவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உயிரிழந்த சண்முகத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் மனைவி கல்லத்தி மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். விசாரணைக்கு அழைத்துச் சென்று போலீஸார் தாக்கியதில் சண்முகம் இறந்துவிட்டதாகக் கூறி அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் போலீஸார் 22 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

சர்ச்சை மரணத்துக்கு நியாயம் கேட்கும் உறவினர்கள்
சர்ச்சை மரணத்துக்கு நியாயம் கேட்கும் உறவினர்கள்

இதற்கிடையே, சண்முகம் உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், பைக்கில் அவர் மீது மோதிய சப்-இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மீது 279 (உயிரிக்கு ஆபத்து ஏற்படும் வகையில் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டுதல்), 304(ஏ) (அஜாக்கிரதையாக மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சண்முகத்தின் சர்ச்சை மரணம் தொடர்பாக அதிருப்தி அடைந்த நேதாஜி சுபாஷ் சேனை உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப்பினர், அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக இன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மருத்துவமனை வளாகத்தில் சமூக அமைப்பினர்
மருத்துவமனை வளாகத்தில் சமூக அமைப்பினர்

அதைத் தொடர்ந்து குடும்பத்தினரையும் அமைப்பினர் சிலரையும் உடலைப் பார்வையிட அனுமதித்தனர். அவர்கள் உள்ளே சென்று சண்முகத்தின் உடலில் போலீஸார் அடித்ததற்கான காயங்கள் எதுவும் இருக்கிறதா எனப் பார்வையிட்டார்கள்.

சண்முகத்தின் உடலைப் பார்வையிட்ட பின்னர் பேசிய நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவரான வழக்கறிஞர் மகாராஜன், ``சண்முகத்தின் உடலைப் பார்த்தோம். அவரது உடலில் விபத்தில் சிக்கியதற்கான எந்த அறிகுறியும் இல்லை. விபத்துக்கான காயங்கள் எதுவும் உடலில் இருக்கவில்லை. 

வழக்கறிஞர் மகாராஜன்
வழக்கறிஞர் மகாராஜன்

சண்முகத்தின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சர்ச்சை மற்றும் சந்தேகம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலையும் கொடுக்க வேண்டும். அதன் பின்னரே உடலைப் பெறுவோம்” என்றார். 

ஏற்கெனவே கடையம் அருகே வனத்துறை தாக்கியதில் உயிரிழந்த அணைக்கரை முத்து உடலை வாங்க மறுத்து 6-வது நாளாகப் போராட்டம் நீடித்துவரும் நிலையில், மீண்டும் ஒரு தரப்பினர் உடலை வாங்க மறுப்பது போலீஸாருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism