Published:Updated:

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீர் மழை... பள்ளி மாணவனின் உயிரைப் பறித்த மின்னல்!

மாணவனின் உயிரைப் பறித்த மின்னல்!

பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மாணவன், மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரமக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீர் மழை... பள்ளி மாணவனின் உயிரைப் பறித்த மின்னல்!

பள்ளி விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த மாணவன், மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரமக்குடியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
மாணவனின் உயிரைப் பறித்த மின்னல்!

ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில், தாளையடிகோட்டை கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் மகன் கஜினி. கஜினி நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில், நேற்று பிற்பகல் பள்ளி வளாக விளையாட்டு மைதானத்தில் சக மாணவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான். அப்போது திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியதையடுத்து மற்ற மாணவர்கள் விளையாட்டு உபகரணங்களை மைதானத்திலேயே போட்டுவிட்டு நிழற்குடைக்கு ஓடிச்சென்றிருக்கின்றனர். கஜினி மழையில் நனைந்து கொண்டிருந்த பேட், பந்தை எடுத்து வருவதற்காக மைதானத்திற்குள் ஓடியிருக்கிறான். அப்போது மின்னல் தாக்கி சிறுவன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மாணவன் கஜினி
மாணவன் கஜினி

இதையடுத்து மாணவனின் உடல் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. மருத்துவமனையில் உயிரிழந்த மகனின் உடலைப் பார்த்து தாய், தந்தை இருவரும் கதறி அழுதது காண்போரை கலங்கச் செய்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார்கோவில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், பரமக்குடி வட்டாட்சியர் தமீம்ராஜா நயினார்கோவில் பள்ளிக்குச் சென்று விசாரணை செய்தார். மாணவன் கஜினி இறப்பு அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.