Published:Updated:

7 பேர் உயிர் குடித்த கெடிலம் ஆறு! - “பட்ட மரமா நிக்கிறோமே...” - கதறித் துடிக்கும் பெற்றோர்

கெடிலம் ஆறு
பிரீமியம் ஸ்டோரி
கெடிலம் ஆறு

எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று கடைசி நிமிடம் வரை உயிருக்குப் போராடிய அவர்களின் முயற்சி, தண்ணீரிடம் தோற்றுப்போனது.

7 பேர் உயிர் குடித்த கெடிலம் ஆறு! - “பட்ட மரமா நிக்கிறோமே...” - கதறித் துடிக்கும் பெற்றோர்

எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று கடைசி நிமிடம் வரை உயிருக்குப் போராடிய அவர்களின் முயற்சி, தண்ணீரிடம் தோற்றுப்போனது.

Published:Updated:
கெடிலம் ஆறு
பிரீமியம் ஸ்டோரி
கெடிலம் ஆறு

கடலூர் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற ஐந்து சிறுமிகள் உள்ளிட்ட ஏழு பெண்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் கண்ணீர் சிந்தவைத்திருக்கிறது!

கடலூர் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏ.குச்சிப்பாளையம் அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணால். இவரின் உறவினரான அயன் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ராஜகுரு, தன் மகள்களான பத்தாம் வகுப்பு படித்துவந்த பிரியதர்ஷினியையும், ஆறாம் வகுப்பு படித்துவந்த காவ்யாவையும் கோடை விடுமுறைக்காக குணாலின் வீட்டுக்கு அனுப்பியிருந்தார். ஜூன் 5-ம் தேதியன்று மதியம், குணாலின் மனைவி ஹரிப்பிரியா, தங்கை நவநீதா, சிறுமிகள் பிரியதர்ஷினி, காவ்யா மற்றும் அதே ஊரைச் சேர்ந்த குணாலின் உறவினர்களான அமர்நாத் மகள் மோனிஷா, சங்கர் மகள் சங்கவி, முத்துராமன் மகள் சுமிதா, 9 வயதுடைய மோனிஷ் என்ற சிறுவனும் கெடிலம் ஆற்றுத் தடுப்பணைக்குக் குளிக்கச் சென்றுள்ளனர்.

7 பேர் உயிர் குடித்த கெடிலம் ஆறு! - “பட்ட மரமா நிக்கிறோமே...” - கதறித் துடிக்கும் பெற்றோர்

சிறுவன் மோனிஷ் மட்டும் ஆற்றின் கரையில் அமர்ந்துகொள்ள, மற்ற அனைவரும் தடுப்பணையிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் ஆற்றில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்துள்ளனர். தண்ணீரின் ஆழத்தையும், அதன் அடர்த்தியையும் அறியாதவர்கள், ஒருவர்மீது ஒருவர் தண்ணீரை அள்ளித் தெளித்து விளையாடியவாறே தண்ணீரின் மையப் பகுதியை நோக்கி முன்னேறியிருக்கிறார்கள். அப்போது திடீரென ஆழமான பகுதியில் சிக்கிக்கொண்ட அவர்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளப் போராடியிருக்கிறார்கள். ஆனால், இந்த விபரீதம் குறித்த புரிதல் இல்லாத சிறுவன் மோனிஷ், அக்காக்கள் ஆற்றில் விளையாடுவதாக நினைத்து அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறான்.

எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று கடைசி நிமிடம் வரை உயிருக்குப் போராடிய அவர்களின் முயற்சி, தண்ணீரிடம் தோற்றுப்போனது. அடுத்தடுத்த நிமிடங்களில் அனைவரும் மூச்சுத்திணறி தண்ணீருக்குள் மூழ்கினர். மூழ்கிய யாரும் வெளியே வராததால், பயந்துபோன சிறுவன் அழுதுகொண்டே ஓடி வந்து ஊருக்குள் தகவல் தெரிவித்திருக்கிறான். அடுத்த 45 நிமிடங்களில் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்தை வந்தடைந்து, ஆற்றுக்குள் மூழ்கிக்கிடந்த ஏழு பேரையும் சடலமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். மருத்துவமனையில், அசைவின்றிக் கிடந்த தங்கள் பிள்ளைகளின் சடலங்களைப் பார்த்த பெற்றோர், “கடைசி நேரத்துல எங்க பிள்ளைங்க எப்படியெல்லாம் துடிச்சுதோ... எங்க பிள்ளைங்க இல்லாம பட்ட மரமா நிக்குறோமே...” என்று நெஞ்சிலடித்துக் கதறியழும் காட்சி அனைவரையும் கண்கலங்கவைத்தது.

நவநீதா, ஹரிபிரியா, மோனிஷா, சங்கவி, கவிதா, பிரியதர்ஷினி, காவ்யா
நவநீதா, ஹரிபிரியா, மோனிஷா, சங்கவி, கவிதா, பிரியதர்ஷினி, காவ்யா

கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டிருக்கும் தடுப்பணைக்காக, அந்தப் பகுதியில்தான் மணல் எடுக்கப்பட்டிருக்கிறது. சுமார் ஒன்பது அடிக்கு ஆழமாகத் தோண்டப்பட்ட அந்தப் பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீர்தான் ஏழு பேரின் உயிரையும் காவு வாங்கியிருக்கிறது என்கிறார்கள்.

இனிமேல் இப்படியொரு விபத்து நிகழாமல் இருக்க கவனமாக இருப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism