Published:Updated:

`ஷூவுக்குள் பாம்பு; உடல் முழுவதும் விஷம்' - சுத்தம் செய்தபோது சென்னை இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

நரம்பு மண்டலம் முழுவதும் விஷம் ஏறியதால் சென்னையில் பாம்பு கடித்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை இளம்பெண் சுமித்ரா
சென்னை இளம்பெண் சுமித்ரா

சென்னை கே.கே.நகரை அடுத்த கன்னிகாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பழனி. தச்சுவேலை செய்துவருகிறார். இவரின் மனைவி சுமித்ரா (35). இவர் 3-ம் தேதி வீட்டை சுத்தம் செய்தார். அப்போது ஷூவுக்குள் ஒரு பாம்பு இருந்துள்ளது. அதை சுமித்ரா கவனிக்கவில்லை.

`2 நிமிடப் பரிசோதனை; 50 ரூபாய் செலவு!' -பாம்பு கடியின் அடையாளம் கண்டறியும் கேரளாவின் புதிய கருவி

அந்த இடத்தை அவர் சுத்தம் செய்தபோது உள்ளே இருந்த பாம்பு அவரைக் கடித்துள்ளது. இதனால் வலியால் சுமித்ரா கதறி துடித்தார். அதோடு பாம்பு, பாம்பு என அவர் அலறினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். சுமித்ராவிடம் விவரம் கேட்ட அவர்கள் அப்பகுதியில் பாம்பை தேடினர்.

இதையடுத்து, சுமித்ராவை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சுமித்ரா இறந்துவிட்டார். இந்தத் தகவல் கே.கே.நகர் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சுமித்ராவின் சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

டிவி சீரியல் ஐடியா; ராஜஸ்தான் பாம்பு; நீண்ட நாள் பிளான்! -கணவரைச் சிக்கவைத்த பிரேத பரிசோதனை அறிக்கை

சுமித்ரா எப்படி இறந்தார் என்று மருத்துவமனையில் விசாரித்தபோது, `சுமித்ராவுக்கு பாம்பு கடித்ததில் அவரின் நரம்பு மண்டலம் முழுவதும் விஷம் ஏறிவிட்டது. இதனால்தான் சுமித்ராவைக் காப்பாற்ற முடியவில்லை' என்று கூறினர். சுமித்ரா குடியிருக்கும் இடத்தில் அடிக்கடி பாம்பு நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சென்னை கே.கே.நகரில் பாம்பு கடித்து இளம்பெண் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.