பிரீமியம் ஸ்டோரி
`தஞ்சாவூர் மாவட்டம், திருச்சென்னம்பூண்டி பகுதியில் மணல் குவாரி அமைத்தால் கல்லணைக்கு பாதிப்பு வரும்’ என்ற கோரிக்கையுடன் அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து போராடிவரும் நிலையில், நான்காவது முறையாக குவாரியை அமைத்திருக்கிறது தமிழக அரசு. இந்தநிலையில், மணல் எடுத்ததால் ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தால் போராட்டம் வலுத்துள்ளது.

இது குறித்துப் பேசிய சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் ஜீவக்குமார், “கல்லணையிலிருந்து பிரிந்து செல்லும் ஆறுகள் மூலமாகத் தமிழகத்தின் பல மாவட்டங்கள் பாசனம் மற்றும் குடிநீர் வசதி பெறுகின்றன. கல்லணையிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருச்சென்னம்பூண்டி பகுதியில், கொள்ளிடம் ஆற்றில் மூன்று முறை குவாரி அமைக்கப்பட்டு மணல் கொள்ளை நடந்தது. இதனால் ஆற்றில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அப்போதிலிருந்தே இந்தப் பகுதி மக்கள் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஒரு மாதத்துக்கு முன்னர் இதே பகுதியில் மீண்டும் மணல் குவாரியை அமைத்துள்ளது தமிழக அரசு. `மூன்றடி ஆழம் வரை மட்டுமே மணல் எடுக்க வேண்டும்’ என்ற அனுமதியை மீறி, இயந்திரங்கள் மூலம் 10 அடி ஆழம் ஆழம் வரை மணல் அள்ளப்படுகிறது. ஒரே அனுமதிச்சீட்டை வைத்து, பல முறை மணல் அள்ளப்படுகிறது.

கல்லணைக்கு ஆபத்து... சிறுமி பலி...

விதியை மீறி மணல் அள்ளியதால்தான், திருச்சியிலுள்ள மேலணை (முக்கொம்பு) 2018-ம் ஆண்டு இடிந்தது. தற்போது, கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குவாரியால் கல்லணையும் ஆபத்தில் சிக்கியிருக்கிறது. டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துவிட்டு, மணல் குவாரி அமைப்பது அபத்தமான விஷயம்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருச்சென்னம்பூண்டியைச் சேர்ந்த ராஜேந்திரன், “ஆற்றுக்குள் 7 கிலோமீட்டர் தூரத்துக்கு 20 அடி அகலத்தில் மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மணல் அள்ளியதால் ஆற்றுக்குள் ஆளுயரப் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. சமீபத்தில் ஆற்றில் குளிக்கச் சென்ற மாலினி என்ற 10 வயது குழந்தை பள்ளத்தில் மூழ்கி இறந்துவிட்டார். ‘இந்த குவாரியைத் தடை செய்ய வேண்டும்’, ‘சிறுமியின் இறப்புக்கு நீதி வழங்க வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளுடன் போராடியதற்காக 67 பேர்மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்” என்றார்.

மாலினி
மாலினி
ஜீவக்குமார் - ராஜேந்திரன் - துரைக்கண்ணு
ஜீவக்குமார் - ராஜேந்திரன் - துரைக்கண்ணு

பூதலூர் தாசில்தார் சிவக்குமார், “மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகுதான் நிரந்தரமாக மூடுவது குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.

அமைச்சர் துரைக்கண்ணுவிடம் பேசியபோது, ‘அதிகாரிகள் மூலம் முழு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு