Published:Updated:

‘18 மாதங்கள் நோய் தொற்றால் அவதி!’- தாய்லாந்து குகையில் சிறுவர்களை மீட்ட `ஹீரோ' மரணம்

கடற்படை வீரர்
கடற்படை வீரர்

தாய்லாந்து குகையில் சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட கடற்படை வீரர் நோய் தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

தாய்லாந்தில் உள்ள தி தம் லுவாங் என்ற குகை கடற்படை வீரர்களின் தியாகத்தையும், 12 சிறுவர்களின் தைரியத்தையும் தாங்கி நிற்கிறது. ஜூன் 23, 2018 தாய்லாந்தில் உள்ள உள்ளூர் கால்பந்தாட்ட குழு அந்த குகையை பார்வையிட சென்றது. 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 12 பேர் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் என மொத்தம் 13 பேர் சென்றனர். திடீரென பெய்த கனமழை அவர்களை குகைக்குள்ளே முடக்கியது. குகைக்குள் தண்ணீர் பெருக்கெடுத்தால் சிறுவர்களால் வெளியேற முடியவில்லை. சிறுவர்கள் குகைக்குள் சிக்கியதையடுத்து மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது.

தாய்லாந்து சிறுவர்கள்
தாய்லாந்து சிறுவர்கள்

கடற்படை, பேரிடர் மீட்புக்குழுவினர் என மீட்புப்படைகளில் கைகோத்தனர். 100க்கும் அதிகமான வீரர்கள் இந்த பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டனர். 18 நாள் போராட்டத்துக்கு பிறகு சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உட்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த ஆழ்கடல் நீச்சல் ஒருவர் ஆக்ஸிஜன் சிலிண்டர் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்தார்.

 ‘11 மரணம்; வட்டமடிக்கும் கட்டுக்கதைகள்'- 18 மாதங்களுக்குப் பிறகு புராரி வீட்டில் குடியேறும் டாக்டர்

இந்த மீட்புப்பணிகளில் கடற்படை வீரர்களின் பணி மிகப்பெரியது. சிறுவர்களை பத்திரமாக மீட்ட வீரர்களுக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்தது. இந்த பணியில் ஈடுபட்ட வீரர்களை தாய்லாந்து மக்கள் ஹீரோக்களாக கொண்டாடினர். இந்த சம்பவம் நடந்து 18 மாதங்கள் கடந்த நிலையில் மீட்புப்பணியில் ஈடுபட்ட தாய்லாந்து கடற்படை வீரர் Beiret Bureerak என்ற வீரர் நோய் தொற்று காரணமாக உயிரிழந்து விட்டதாக கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து குகை மீட்புப் பணி
தாய்லாந்து குகை மீட்புப் பணி

கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீர்மூழ்கி வீரரான Beiret Bureerak மீட்புப்பணியில் இருந்த போது அவருக்கு ரத்தத்தில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த ஓராண்டுகளாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவரது உடல்நிலையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு