Published:Updated:

`தேனி நர்சிங் மாணவி தற்கொலை!' - சந்தேகம் எழுப்பும் உறவினர்கள்

Theni GH
Theni GH

நீட் சர்ச்சையில் சிக்கிய தேனி மருத்துவக்கல்லூரி தற்போது நர்சிங் மாணவி தற்கொலை விவகாரத்திலும் சிக்கியுள்ளது.

தேனி கானாவிலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், டிப்ளமோ நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்துவந்த மாணவி, இன்று அவரது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறும் உறவினர்கள், மருத்துவக்கல்லூரி வாயிலில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Hostel
Hostel

உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரின் மகள் திவ்யா. தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், டிப்ளமோ நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். இன்று காலை, சக மாணவிகள், திவ்யாவின் அறை மூடப்பட்டிருப்பதைக் கண்டு, கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரமாக கதவை திவ்யா திறக்காததால், சந்தேகமடைந்த சக மாணவிகள், விடுதிக் காப்பாளரிடம் விவரத்தைத் தெரிவித்திருக்கிறார்கள். விடுதிக் காப்பாளரும் கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டிருந்ததால், கதவைத் திறக்க முடியவில்லை.

`சிறுமிக்கு நேர்ந்த துயரம்' - தேனி இளைஞருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனை #TamilnaduCrimeDiary

உடனே, கல்லூரி நிர்வாகத்துக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்துவந்த காவல்துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்றனர். உள்ளே, மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார் திவ்யா. உடலைக் கைப்பற்றிய போலீஸார், உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். திவ்யாவுடன் படித்துக்கொண்டிருக்கும் சக மாணவிகள், விடுதி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Theni Medical College
Theni Medical College

இந்த நிலையில், சமீபத்தில் இறந்த திவ்யாவின் பெரியப்பா இறுதிச் சடங்கிற்கு, திவ்யாவை அழைத்துச் செல்ல அவரது உறவினர்கள் கல்லூரிக்கு வந்த நிலையில், அவரை அனுமதிக்க மறுத்துள்ளனர். தனது பெரியப்பாவின் இறுதிச் சடங்கிற்கு கூட செல்ல முடியாத நிலையில், மிகுந்த மன உலைச்சலில் திவ்யா இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆட்டோவில் தொலைத்த 74,000 ரூபாய்! - முதியவரிடம் ஒப்படைத்த தேனி ஆட்டோ டிரைவர்

இது ஒருபுறம் என்றால், திவ்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது உறவினர்கள் சுமார் 200 பேர், மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீஸார் லேசான தடியடி நடத்திக் கலைத்தனர். இது தொடர்பாக கானாவிலக்கு போலீஸாரிடம் கேட்டபோது, ``விசாரித்துவருகிறோம். விசாரணை முடிவில்தான் தற்கொலைக்கு என்ன காரணம் எனத் தெரியவரும்” என்றனர்.

Divya
Divya

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் விவகாரத்தில் முதல் குற்றவாளியான மாணவர், தேனி மருத்துவக்கல்லூரியைச் சேர்ந்தவர். நீட் சர்ச்சையில் சிக்கிய தேனி மருத்துவக்கல்லூரி தற்போது நர்சிங் மாணவி தற்கொலை விவகாரத்திலும் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எழில் கொஞ்சும் மேகமலை படங்கள்!
பின் செல்ல