Published:Updated:

`உற்சாகக் குளியல் போட்ட 3 சிறுவர்கள்; உயிரைக் குடித்த குளம்!' - திருச்சி சோகம்!

சம்பவ இடம்

மணப்பாறை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

`உற்சாகக் குளியல் போட்ட 3 சிறுவர்கள்; உயிரைக் குடித்த குளம்!' - திருச்சி சோகம்!

மணப்பாறை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
சம்பவ இடம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை காட்டுப்பட்டி அண்ணாவி நகரைச் சேர்ந்தவர்கள் முருகன் - ராணி தம்பதியர். இவர்களுக்கு மணிகண்டன் (16), முரளி (13) என இரண்டு மகன்கள். தச்சுத் தொழிலாளியான தந்தைக்கு மூத்த மகன் மணிகண்டன் உதவியாக இருந்துவந்த நிலையில், முரளி மணப்பாறை அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று மணிகண்டன், முரளி, அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வின் குமார் (14) ஆகிய மூவரும், கீழபூசாரிபட்டியில் உள்ள பாப்பான்குளத்தில் குளிக்கச் சென்றிருக்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
சம்பவ இடம்
சம்பவ இடம்

அப்போது எதிர்பாராதவிதமாக முரளி தண்ணீரில் மூழ்கிப்போயிருக்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன், அஸ்வின் குமார் இருவரும் முரளியை காப்பாற்ற நினைக்க, அவர்களும் பரிதாபமாக நீரில் மூழ்கி பலியாகினர். அருகிலிருந்தவர்கள் இதைப் பார்த்து நீரில் மூழ்கியவர்களை சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாகப் போராடி சடலமாகத்தான் மீட்டெடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் மூன்று பேரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

உயிரிழந்த சிறுவர்கள்
உயிரிழந்த சிறுவர்கள்

தன் இரண்டு மகன்களும் நீரில் மூழ்கி இறந்துவிட்டார்கள் என்ற தகவலைக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சியில் மயக்கமடைந்த முருகனுக்கு, மணப்பாறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டுவருகிறது. பாப்பான்குளத்தில் மண் எடுத்ததில் குளம் முழுக்க மேடு பள்ளமாக மாறிப்போயிருப்பதாகவும், அது தெரியாமல்தான் குளிக்கச் செல்பவர்கள் பலியாகும் சம்பவங்கள் நடப்பதாகவும் ஊர்மக்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே ஐந்து பேரை பலிவாங்கியிருக்கும் இந்தக் குளம், இப்போது மூன்று பேரின் உயிரையும் குடித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.