Published:Updated:

நாள்பட்ட நோய்கள்; ஒருமாத சிகிச்சை! - கொள்ளையன் திருவாரூர் முருகன் உடல்நலக் குறைவால் மரணம்

திருவாரூர் முருகன்
News
திருவாரூர் முருகன்

`மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு பிறகு உடற்கூறாய்வு செய்யப்பட்டு முருகனின் உடல் அவரின் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்படும்’ என பெங்களூர் போலீஸார் கூறுகின்றனர்.

திருச்சி லலிதா ஜுவல்லரியில் நகைக்கடையில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையன் முருகன் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.

லலிதா ஜூவல்லரி
லலிதா ஜூவல்லரி

கடந்த ஆண்டு, அக்டோபர் 2-ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டது. கடையின் மேற்கு சுவரைத் துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம், வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட ஆபரணங்களைக் கொள்ளையடித்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தச் சம்பவத்தில் திருவாரூரைச் சேர்ந்த முருகன், அவரது அக்கா மகன் சுரேஷ், கணேசன் ஆகியோர் கொண்ட கும்பல் ஈடுபட்டது தெரியவந்தது. இதே கும்பல் திருச்சி சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் திருடியது தெரியவரவே, திருச்சி தனிப்படை காவல்துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடிவந்தனர். சுரேஷ், செங்கம் நீதிமன்றத்திலும், முருகன் பெங்களூரூ நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.

சிகிச்சையில் முருகன்
சிகிச்சையில் முருகன்

இவர்களிடமிருந்து கிலோ கணக்கில் நகைகள் மீட்கப்பட்டன. பின்னர், முருகன் பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பெங்களுரூ, சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். மருத்துவர்கள் அவருக்கு ஒருமாத காலம் அவகாசம் கொடுத்திருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவருடைய இடது கை, கால் வாதநோயால் செயல்படாமல் போய்விட்டது. வாய்பேச முடியாத நிலையில் எய்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நோய்களுடன் போராடிவந்த முருகன், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு 11 மணி அளவில் இறந்துவிட்டார்.

லலிதா ஜூவல்லரி முருகன்
லலிதா ஜூவல்லரி முருகன்

இதைத் தொடர்ந்து, `மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு பிறகு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு முருகனின் உடல் அவரின் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்படும்’ என பெங்களூர் போலீஸார் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். இறந்த முருகன் மீது சென்னையில் 12 வழக்குகளும், கர்நாடகாவில் 46 வழக்குகளும், ஆந்திராவில் ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளன.