Published:Updated:

`கணவரின் கண்முன்னே மனைவியை இழுத்துச் சென்ற புலி!’ - முதுமலை பயங்கரம்

புலி தாக்கியதில் உயிரிழந்த பெண்
புலி தாக்கியதில் உயிரிழந்த பெண்

முதுமலை சிங்காரா பகுதியில், கால்நடை மேய்க்கச் சென்ற பழங்குடிப் பெண் ஒருவர் புலி தாக்கி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனச்சரகத்துக்குட்பட்ட கல்ஹல்லா காப்பு காட்டுக்குள் வழக்கம்போல் கால்நடைகளை மேய்க்கவும், விறகு சேகரிக்கவும் குரும்பர்பாடியைச் சேர்ந்த சிலர் சென்றிருக்கிறார்கள்.

புலித் தாக்குதல்
புலித் தாக்குதல்

வனத்தில் விறகு சேகரித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர், திடீரென பயங்கர சத்ததுடன் அலறியிருக்கிறார். அலறல் சத்தம் கேட்ட மற்றவர்கள் அருகில் சென்று பார்த்தபோது, பெண் புலி ஒன்று அந்தப் பெண்ணை அடித்து புதருக்குள் இழுத்துச் சென்றிருக்கிறது. இதைக் கண்டு பதறியவர்கள், கூச்சலிட்டிருக்கிறார்கள்.

சுமார் 200 மீட்டர் தூரம் புதருக்குள் பெண்ணை இழுத்துச் சென்ற புலி, மக்களின் கூச்சலால் பெண்ணை விட்டுவிட்டு ஓடியிருக்கிறது. இவர்கள் அருகில் சென்று பார்த்தபோது அந்தப்பெண் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்திருக்கிறார்.

புலித் தாக்குதல்
புலித் தாக்குதல்

இந்தத் துயர நிகழ்வு குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை ஊழியர், ``சுமார் 12 மணி வாக்கில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாதன், அவர் மனைவி உள்ளிட்ட சிலர் காட்டுக்குள் இருந்திருக்கிறார்கள்.

மூணாறு: நீரோடையில் தேடும் பணி; குறுக்கிட்ட புலி! - அதிர்ச்சியில் மீட்புக்குழுவினர்

மாதன் கண் முன்னாலேயே, அவர் மனைவி கெளரியைத் தாக்கிய புலி, கொன்று இழுத்துச் சென்றிருக்கிறது.உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கிறோம்" என்றார்.

புலித் தாக்குதல்
புலித் தாக்குதல்

நீலகிரியில் கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் புலி - மனித எதிர்கொள்ளல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இடையில் அது போன்ற சம்பவம் எதுவும் நடைபெறாத நிலையில், தற்போது நடந்திருக்கும் இந்தச் சம்பவம் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு