‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித்தை உயிருடன் மீட்டுவிட மாட்டார்களா...’ என்ற அனைவரின் பதைபதைப்பும் பலனற்றுப்போய்விட்டன. பிரியாவிடை பெற்று கல்லறைக்குள் நித்திரைகொள்ளப் போய்விட்டான் மழலை சுஜித். இனி ஒரு மழலை இப்படி மரணிக்கக் கூடாது. ``என்ன மாதிரியான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?’’ என்று துறைசார் வல்லுநர்கள் சிலரிடம் கேட்டோம். பெயர் சொல்ல விரும்பாத அவர்கள், பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

“ஆழ்துளைக் கிணறுகளைப் பற்றிய தெளிவான புள்ளிவிவரங்கள், அரசுத்தரப்பில் எந்தத் துறையிடமும் இல்லை. ஒரு மாவட்டத்தில் எத்தனை ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன, அவற்றில் செயல்பாட்டில் இல்லாதது எத்தனை எனத் தெரியவில்லை. இந்தப் புள்ளிவிவரம் தெரிந்தால் மட்டுமே அதற்கேற்ப திட்டங்களை வகுக்க முடியும். அதற்கான கணக்கெடுப்பை அரசு நடத்த வேண்டும்.

ஆழ்துளைக் கிணறுகளைப் பொறுத்தவரை, பயன்பாட்டில் இல்லாத கிணறுகளின் உள்ளே இருக்கும் பிளாஸ்டிக் பைப்களை உருவி எடுத்துவிடுகிறார்கள். சில இடங்களில் தண்ணீரே கிடைக்காதபோது, பிளாஸ்டிக் பைப்பே வைக்க மாட்டார்கள். பைப் இல்லையென்றால், துளையின் அகலம் அதிகரித்துவிடும். இதனால், குழந்தைகள் எளிதில் உள்ளே விழுந்துவிடுகிறார்கள். இந்தத் தவற்றை, ஒருபோதும் செய்யக் கூடாது; சட்டம் இயற்றித் தடுக்க வேண்டும்.

ஏற்கெனவே பிளாஸ்டிக் குழாய்கள் உருவி எடுக்கப்பட்டு கவனிப்பின்றிக் கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை, கல் அல்லது மிகப்பெரிய மரப்பலகைகளைக்கொண்டு பாதுகாப்பான வகையில் மூடிவைக்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் செறிவூட்டும் வடிக்கிணறுகளாக பாதுகாப்பான வகையில் மாற்றியமைக்க வேண்டும். இதனால் உயிரிழப்பு தடுக்கப்படுவதுடன் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்’’ என்றனர்.

பரமத்திவேலூர் தாலுகா ரிக் இயந்திர உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் செந்தில், “ஆழ்துளைக் கிணறுகளில் உள்ள பைப், ஏழரை இன்ச் விட்டம்கொண்டது. குழந்தைகள் இதன் வழியே குழிக்குள் விழ வாய்ப்பில்லை. மேலும், தரைமட்டத்திலிருந்து சுமார் இரண்டு அடி உயரம் உள்ளவாறு இந்தக் குழாய் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் பாதுகாப்பு. ஆனால், இந்தக் குழாய்களை உருவிவிட்டால், குழியின் விட்டம் ஒன்பதரை இன்ச் சுற்றளவாகிவிடும். இதுவே குழந்தைகள் குழிக்குள் விழ ஏதுவாக அமைந்துவிடுகிறது. எனவே, பைப்பை எடுக்கக் கூடாது என்று சட்டம் கொண்டுவர வேண்டும்’’ என்றார்.

சட்டப் பஞ்சாயத்து இயக்கத் தலைவர் சிவ.இளங்கோ, “கிராம நிர்வாக அதிகாரிக்குத் தெரியாமல் ஆழ்துளைக் கிணறுகள் தோண்ட முடியாது. நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் உட்பட 24 வகையான கணக்குகளை அவர்கள்தான் பராமரிக் கிறார்கள். ஒரு சர்வே எண்ணில் விவசாயம் செய்யப்படுகிறது என்றால், அங்கு என்ன பயிர் விளைவிக்கப்படுகிறது, எத்தனை அடி ஆழம்கொண்ட ஆழ்துளைக் கிணறு உள்ளது என்பது வரை அனைத்தையும் கண்காணிக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. இவையெல்லாம் சரிபார்க்கவே வருடத்துக்கு ஒருமுறை ஜமாபந்தி நடக்கிறது. எனவே, ஒரு ஆழ்துளைக் கிணறு செயல்படாமல் இருந்தால் அதுபற்றிய விவரம் வி.ஏ.ஓ-வுக்குத் தெரிந்திருக்கும். எனவே, நடுகாட்டுப்பட்டியில் சிறுவன் பலியான சம்பவத்தில் வி.ஏ.ஓ மட்டுமின்றி, அவரைக் கண்காணிக்கும் பொறுப்புகொண்ட வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர் என அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும்’’ என்றார்.

“இனியொரு விபத்து ஏற்படாமலிருக்க, சட்டரீதியாக என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?” என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் கேட்டோம்.

“ஆழ்துளைக் கிணறுகள் பாதுகாப்பு சம்பந்தமாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளைக் கடைப்பிடித்தாலே, இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது. ஆழ்துளைக் கிணறு அமைக்க முன் அனுமதி பெறுவது, செயல்படாமல் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை பாதுகாப்பான முறையில் மூடி வைப்பது என அனைத்து நடைமுறைகளையும் அரசு அதிகாரிகளுடன் பொதுமக்களும் இணைந்து செய்ய வேண்டும்.

மணப்பாறை சம்பவத்தில்கூட அந்த ஆழ்துளைக் கிணறு செயல்படாமல் இருக்கிறது என்ற விவரம் அரசுத்தரப்புக்குத் தெரிவிக்கவில்லை. இந்தச் சம்பவத்தில், போர்வெல் அமைத்தவர்கள்மீது மட்டுமன்றி பொறுப்பற்றுச் செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்போம். அதுவே, அடுத்து இப்படி ஒரு விபத்து நடக்காமல் தடுக்கும்” என்றார் உறுதியாக.

வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் பேசினோம். ‘‘ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதி வாங்குவதில் ஆரம்பித்து, செயல்படாத கிணறுகளை பாதுகாப்பாக மூடிவைப்பது வரை சட்ட நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றை தீவிரமாகச் செயல்படுத்துவோம். அந்த வகையில், `செயல்படாத ஆழ்துளைக் கிணறுகளை, மழைநீர் சேமிப்பு வடிகாலாக மாற்ற வேண்டும்’ என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆணை பிறப்பித்துள்ளது. உள்ளாட்சித் துறை, இந்தப் பணிகளை மாவட்டம்தோறும் கண்காணித்தும் கணக்கெடுத்தும் வருகிறது. `அனைத்து மாவட்ட ஆட்சியர்களுமே நேரடியாக கள ஆய்வுசெய்ய வேண்டும்’ என உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை சார்பிலும் பள்ளிக் குழந்தைகள் விளையாடும் இடங்கள் ஆய்வுசெய்யப்பட்டுவருகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் மீட்புக்கருவிகள் கண்டுபிடிப்பவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இப்படி ஒரு துயரம் ஏற்படாது” என்றார் நம்பிக்கையுடன்.

அரசு, நிரந்தரமான தீர்வுகாணும் என நம்புவோம்!

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான மீட்புப்பணிகளைச் செய்துவரும் கைஃபா அமைப்பினர், “பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை, மழைநீர் சேமிப்புக் கட்டமைப்பாக மாற்றித் தருகிறோம்” என்று அழைப்புவிடுத்திருக்கிறார்கள்.

இதுகுறித்துப் பேசிய அந்த அமைப்பின் பொருளாளர் கார்த்திக், “இந்தப் பகுதியில் நான்கு தாலுகாக்களிலிருந்து மட்டும் பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேமிப்புக் கட்டமைப்பாக மாற்றித் தரக் கோரி, 26 அழைப்புகள் வந்துள்ளன. திருவண்ணாமலை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் அழைத்திருக்கிறார்கள். ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றிலும் மூன்று அடி ஆழம், மூன்று அடி அகலம் அளவுக்குக் குழி தோண்டி, சிமென்ட் உறைகளை அமைத்து பாதுகாப்பான முறையில் இதை உருவாக்குகிறோம். இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும். இதற்கு அதிகபட்சம் 3,000 ரூபாய் மட்டுமே செலவாகும்” என்றார்.

புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலங்களில் 50-க்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் 15 ஆண்டுகளாக மூடப்படாமல் இருப்பதை விகடன் சுட்டிக்காட்டியது. இதைத் தொடர்ந்து அவற்றை மூடுவதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டிருக்கிறது புதுச்சேரி அரசு.

2004-ம் ஆண்டு புதுச்சேரியில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக சேதராப்பட்டு, துத்திப்பட்டு, கரசூர் பகுதிகளில் 840 ஏக்கர் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தியது. பல்வேறு சர்ச்சைகள் காரணமாக அந்தத் திட்டம் ரத்துசெய்யப்பட்டது. இந்த நிலங்களை விவசாயிகளுக்குத் திருப்பி அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், பணிகளில் முன்னேற்றமில்லை. இந்த நிலங்களில்தான் கடந்த 15 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகள் இருக்கின்றன.

நாம் அங்கு சென்று பார்த்தபோது, அந்த ஆழ்துளைக் கிணறுகள் எங்கு இருக்கின்றன எனக் கண்டுபிடிக்க முடியாத வகையில் புதர்கள் மண்டிக்கிடந்தன. உடனே புதுச்சேரி ஆட்சியர் அருணைத் தொடர்புகொண்டு இந்தத் தகவலைத் தெரிவித்தோம். மறுநாளே அதிகாரிகளுடன் அங்கு வந்தவர், அதிரடி ஆய்வை மேற்கொண்டார்.

நம்மிடம் பேசிய ஆட்சியர், “நீங்கள் குறிப்பிடும் இடம் மட்டுமின்றி, புதுச்சேரி முழுவதும் இருக்கும் பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளைக் கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளேன். இதற்காக ஒவ்வோர் ஊரிலும் வி.ஏ.ஓ., கள வேளாண்மை அதிகாரி, நீர்ப்பாசன அதிகாரி ஆகியோர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறோம். பயன்படாத அனைத்து ஆழ்துளைக் கிணறுகளும் விரைவில் மூடப்படும்” என்றார்.

தொடர்ந்து, `மாநிலம் முழுவதும் மூடாமல் இருக்கும் பயன்படாத ஆழ்துளைக் கிணறுகளை இரண்டே நாளில் மூடிவிட்டு அறிக்கை அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருக்கிறார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.