Published:Updated:

`அவள் இனி பிழைக்க மாட்டாள்.. அவளுக்கு முன் நான் போகிறேன்!' -திருச்சி காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு

representational image
representational image

``எங்களின் காதலுக்கு மதத்தைக் காரணம் காட்டி பெற்றோர் எதிர்க்கிறார்கள். அதனால் இந்த உலகில் வாழ விரும்பவில்லை” என காதல் ஜோடி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி, புத்தூர் மூலக்கொல்லைப் பகுதியைச் சேர்ந்தவர் அமீர்கான். இவரின் மகன் சிராஜுதீன் பெயின்டராக பணியாற்றி வந்தார். இவருக்கும் திருச்சி கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரின் மகளான மேனகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்களின் நட்பு காதலாக மாறியது. இந்த நிலையில், மேனகா படிப்பை முடித்து புத்தூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராகப் பணியாற்றி வந்தார்.

சமீபத்தில் இவர்களின் காதல் விவகாரம் அவர்களின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலுக்கு இருதரப்பிலும் எதிர்ப்பு வலுத்தது. தங்களின் காதலுக்காக மேனகாவும், சிராஜுதீனும் தங்கள் குடும்பத்தின் சம்மதம் பெற முயற்சி செய்தனர்.

மேனகா
மேனகா

இந்த நிலையில், அவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கவே, இனி இருவரும் சேருவதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்து மனவேதனையில் இருந்த மேனகா கடந்த 27-ம் தேதி விஷத்தைச் சாப்பிட்டுவிட்டார்.

தகவலறிந்த அவரின் பெற்றோர் மேனகாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து, தனது காதலி மேனகாவின் தற்கொலை முயற்சி குறித்து தகவலறிந்த வேதனையில் தவித்த சிராஜுதீன், நண்பர்கள் மூலம் மேனகாவுக்கு வழங்கப்படும் சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல வேலைக்குச் சென்ற சிராஜுதீன், இரவு வீடு திரும்பினார். தனது அறைக்குச் சென்று, தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப் பார்த்துப் பதறிய பெற்றோரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சிராஜுதீனின் உடலை மீட்டனர்.

சிராஜ்தீன்
சிராஜ்தீன்

தொடர்ந்து, இதுகுறித்து தகவலறிந்த புத்தூர் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து சிராஜுதீனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த செவிலியர் மேனகாவும் நேற்று சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இருவரது உடல்களும் திருச்சி அரசு மருத்துமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தன. சிராஜுதீன் மற்றும் மேனகா ஆகியோரின் மரணம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், ``மதத்தைக் காரணமாக காட்டி காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த மேனகா விஷமருந்தியதும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மேனகா இனி பிழைக்க மாட்டார் என மருத்துவர்கள் கைவிட்டதை நண்பர்கள் மூலம் தெரிந்துகொண்ட சிராஜுதீன், காதலி இல்லாத உலகில் வாழ விரும்பாமல் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். சிராஜுதீன் இறப்பதற்கு முன், `இவங்க எல்லாம் மதத்தைக் காரணம் காட்டிப் பிரிக்கிறார்கள். ஆனால், சாவிலும் எங்களைப் பிரிக்க முடியாது.

`நமக்கான அடையாளத்தை உருவாக்குவோம்' - நம்பிக்கை தந்த போட்டித் தேர்வுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி!

என்னால்தான் மேனகாவுக்கு இந்த நிலைமை. என்னை அவள் காதலிக்கவில்லை எனில் இப்படி ஆகியிருக்காது. அவள் இனி பிழைக்க மாட்டாள். அதனால் அவள் இறப்பதற்கு முன்னால் நான் போகிறேன்” என நண்பர்களிடம் கூறியிருக்கிறார் என்று தெரிவித்தனர்

இருவரது மரணம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு