Published:Updated:

`பணத்தைக் கேட்டால் மிரட்டுகிறார்கள்!' - சக போலீஸாரால் தற்கொலையை நாடிய பெண் காவலர்

தற்கொலை
தற்கொலை ( Representational Image )

``எல்லோரையும் போல நானும் சிறப்பாக வாழணும், சொத்து பத்து சேர்த்து சமூகத்தில் நல்ல நிலைமையில் இருக்கனும்னு நினைச்சேன். அது தவறா?”

திருச்சியில் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிய சக காவலர்களால் தற்கொலை முடிவைத் தேடிக் கொண்டார் பெண் தலைமைக் காவலர் ஒருவர்.

காவலர் பவானி
காவலர் பவானி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி காவல்நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தவர் பவானி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனது மகளுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 28-ம் தேதி எலி பேஸ்ட்டை குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளார். பின்னர் அவராகவே தான் விஷம் குடித்துள்ளதாகக் கூறி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பவானி இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்திருந்த நிலையில், அவரது செல்போனில் விஷம் குடிக்கும் முன்பே ஒரு வீடியோ ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

`குடும்பப் பிரச்னை; மது போதையில் ரகளை!’- தட்டிக்கேட்ட எஸ்.ஐயைத் தாக்கிய புதுக்கோட்டை காவலர்

அந்த வீடியோவில் பவானி, ``எல்லோரையும் போல நானும் சிறப்பாக வாழனும், சொத்து பத்து சேர்த்து சமூகத்தில் நல்ல நிலைமையில் இருக்கனும்னு நினைச்சேன். அது தவறா? 2013-ம் ஆண்டு திருச்சி ஒன் பட்டாலியனில் இருக்கும் உமாவிடம் நான்கு லட்சமும், டெல்லி பட்டாலியனில் இருக்கும் அருள் முருகானந்தத்திடம் நான்கு லட்ச ரூபாயும் கடனாகக் கொடுத்திருக்கிறேன். பணத்தைப் பலமுறை கேட்டேன் கொடுக்கவில்லை. எனக்குத் தெரிந்தவர்களை வைத்துக்கேட்டால், நீ யாரிடம் வேண்டுமானாலும் சொல்லு.. நான் வாங்கிய பணத்தைத் தரமுடியாது என்று இருவரும் மிரட்டினார்கள். கடந்த இரண்டு நாள்களாகக் காய்ச்சல், தலைவலி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளதால் கொரோனா வந்துவிட்டதோ என்ற பயத்தில் என்ன பண்றதுன்னே தெரியவில்லை.

காவலர் பவானி
காவலர் பவானி

எல்லோரும் என்னை ஏமாற்றுகிறார்கள். நான் இருந்து என்ன பயன்” எனப் பேசியிருக்கிறார்.

வாங்கிய பணத்தைத் தராமல் சக போலீஸ்காரர்கள் ஏமாற்றியதால் பெண் காவலர் விஷம் குடித்துள்ளதாகக் கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி:`அம்மாவை ஒருமையில் பேசியதால் அடித்தேன்!’ - சர்ச்சையில் காவலர்
அடுத்த கட்டுரைக்கு