Published:Updated:

போட்டியின்றி தேர்வு; திடீர் மாரடைப்பு! - மதுரை ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு நேர்ந்த துயரம்

இவர்தான் வார்டு உறுப்பினர் என்பது உறுதியானது. இதையடுத்து, உறவினர்களும் நண்பர்களும் இவரிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள்.

ஆனந்தன்
ஆனந்தன்

மதுரை திருமங்கலம் ஒன்றியம் பொன்னமங்கலத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். 42 வயதான இவர் கருமாத்தூரில் பலசரக்கு கடை வைத்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலில் தன் சொந்த ஊராட்சியான பொன்னமங்கலத்தில் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

`அவரால் நமக்கு நன்மை கிடைக்கும்!’- ஊராட்சி மன்றத் தலைவர் ஏலத்தை எதிர்த்த இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்

மனுபரிசீலனையின்போது ஆனந்தனை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாவிட்டலும், இவர்தான் வார்டு உறுப்பினர் என்பது உறுதியானது. இதையடுத்து, உறவினர்களும் நண்பர்களும் இவரிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள்.

இந்த மகிழ்ச்சியோடு கருமாத்தூரிலுள்ள தன் கடையை கவனிக்கச் சென்றவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு, மயங்கி விழுந்திருக்கிறார். உடனே, அருகிலிருந்தவர்கள் சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்த்தனர்.

ஆனந்தன்
ஆனந்தன்

அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அவரின் உறவினர்களும் நண்பர்களும் கதறி அழுதனர்.

போட்டியின்றி ஊராட்சி வார்டில் வெற்றி பெற்றவர் திடீர் மரணமடைந்த செய்தியால் திருமங்கலம் பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர்.