Published:Updated:

`கணித ஆசிரியரின் டியூஷன் தொந்தரவு?' - விபரீத முடிவெடுத்த உசிலை பள்ளி மாணவன்

தன் சாவுக்கு ஆசிரியர் ரவிதான் காரணம் என்று அக்கடிதத்தில் எழுதி வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.

Representational Image
Representational Image

மதுரை மாவட்டம் தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்த சிங்கம் என்பவரின் மகன் பாலாஜி. உசிலம்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்துவந்தார். இந்த நிலையில், நேற்று அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் எழுதி வைத்த கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலாஜி
பாலாஜி

சந்தேக மரணம் என்று வழக்கு பதிவுசெய்து, மாணவன் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய, உசிலம்பட்டி தாலுகா காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பாலாஜியின் பாடப்புத்தகங்களை அவனது பெற்றோர் சோதனை செய்துபார்த்தபோது அவர்களுக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தைக் கண்டெடுத்தனர். அக்கடிதத்தில், பள்ளியில் கணித ஆசிரியராக ரவி என்பவர் பணியாற்றி வருவதாகவும், அவர் வீட்டுக்கு டியூஷன் படிக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தியதாகவும், டியூஷன் முடித்து வீடு திரும்ப நேரம் ஆகும் என்பதால்தான் சேரவில்லை என்றும், இதனால் தன்னை ஆசிரியர் ரவி தினமும் திட்டி வந்ததாக மாணவர் எழுதியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

தற்கொலை எண்ணத்துல இருக்கிறவங்களுக்கு அட்வைஸ் வேண்டாம், ஆனால்..! #WorldMentalHealthDay

``கடந்த சனிக்கிழமை சக மாணவர்கள் முன் இதுபோல் தன்னை திட்டி அவமானப்படுத்தியதால்தான் தற்கொலை செய்து கொண்டதாகவும், தன் சாவுக்கு ஆசிரியர் ரவிதான் காரணம்'' என்றும் அக்கடிதத்தில் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. தற்போது காவல்துறையினர் இந்தக் கடிதத்தை அடிப்படையாக வைத்து சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தி வருகிறார்கள். 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.