Published:Updated:

கொரோனா பாதிப்பு... அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் காலமானார்!

 வெற்றிவேல்
வெற்றிவேல்

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வலதுகரமாக அறியப்படும் வெற்றிவேல், கடைசியாக பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி, தினகரனின் இல்லத்தில் நடைபெற்ற மலரஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

 வெற்றிவேல்
வெற்றிவேல்

காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய வெற்றிவேல் பின்னர், அ.தி.மு.க-வில் இணைந்தார். சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பிறகு, ஜெயலலிதா போட்டியிட சென்னைக்குள்ளேயே அ.தி.மு.க-வுக்கு சாதகமான தொகுதியைப் பட்டியலிடப்பட்டது.

அப்போது, ``ஆர்.கே.நகர் சின்னத் தொகுதி. பிரசாரத்தை சீக்கிரமே முடிச்சுடலாம்மா. தொகுதியில நம்ம கட்சிக்காரங்கதான் அதிகம்” என ஜெயலலிதாவை சம்மதிக்கவைத்து, தனது ஆர்.கே.நகர் தொகுதியை ஜெயலலிதாவுக்காக விட்டுத்தந்தவர் வெற்றிவேல். ஜெயலலிதாவுக்கு அளித்திருந்த உறுதியின்படி, அவரை 88 சதவிகித வாக்குகளுடன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வாக பெரிய வெற்றியும் அடையவைத்து ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றார் வெற்றிவேல். ஜெயலலிதாவுக்குப் பிற்பாடு சசிகலாவுக்கும் தீவிர விசுவாசியான இவர், அ.ம.மு.க-வின் பொருளாளராகவும் இருந்துவந்தார்.

 வெற்றிவேல்
வெற்றிவேல்

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வலதுகரமாக அறியப்படும் வெற்றிவேல், கடைசியாக பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி, தினகரனின் இல்லத்தில் நடைபெற்ற மலரஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதற்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் அவர் தலைகாட்டவில்லை. அவருக்கு அக்டோபர் 6-ம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வெற்றிவேல், சிகிச்சை பலனின்றி காலமானார்.

கொரோனா பாதிப்பு... தீவிர சிகிச்சை! - எப்படி இருக்கிறார் அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல்?
அடுத்த கட்டுரைக்கு