Published:Updated:

விருதுநகர்: இடுப்பளவு மழைவெள்ளம்! - இறந்தவரின் உடலைக் கயிறு கட்டித் தூக்கிச் செல்லும் அவலம்!

கயிறு கட்டித் தூக்கிவரப்படும் மூதாட்டியின் உடல்

விருதுநகர் கிருதுமால் நதியில் கரைபுரண்டு ஓடும் மழைவெள்ளத்தைக் கயிறு கட்டிக் கடந்து, இறந்தவரின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர் கிராம மக்கள்.

விருதுநகர்: இடுப்பளவு மழைவெள்ளம்! - இறந்தவரின் உடலைக் கயிறு கட்டித் தூக்கிச் செல்லும் அவலம்!

விருதுநகர் கிருதுமால் நதியில் கரைபுரண்டு ஓடும் மழைவெள்ளத்தைக் கயிறு கட்டிக் கடந்து, இறந்தவரின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர் கிராம மக்கள்.

Published:Updated:
கயிறு கட்டித் தூக்கிவரப்படும் மூதாட்டியின் உடல்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வைகை அணையில் தண்ணீர் திறப்பு காரணமாக விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிருதுமால் நதியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. அருப்புக்கோட்டை, திருச்சுழியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த சில நாள்களாகத் தொடர் கனமழை பெய்து வருவதாலும் கிருதுமால் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், இந்த நதியைச் சுற்றியுள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ளநீரைக் கடந்துதான் வேலைகளுக்குச் சென்றுவருகிறார்கள்.

விருதுநகர்
விருதுநகர்

பள்ளி மாணவர்கள் 3 கி.மீ தூரம் ஊரைச் சுற்றி பள்ளிகளுக்குச் சென்றுவருகிறார்கள். இந்த நிலையில், உலக்குடி அருகேயுள்ள திருமாணிக்கனேந்தல் கிராமத்தில் 75 வயதான பாலாயி என்ற மூதாட்டி வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் உடலை உலக்குடியிலுள்ள மயானத்தில் அடக்கம் செய்ய கிராம மக்கள் இடுப்பளவு வெள்ளநீரில் தூக்கிச் சென்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒவ்வோர் ஆண்டுப் பருவ மழையின்போதும் இதே பாதிப்பு ஏற்படுவதால், கிருதுமால் நதியைக் கடந்து செல்லும் வகையில் தரைப்பாலம் அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் இந்தக் கிராம மக்கள். இது குறித்து திருமாணிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமியிடம் பேசினோம். ``எங்க கிராமத்துல 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிச்சுட்டுவர்றோம். கிருதுமால் நதிப் பகுதி வழியாத்தான் அடுத்த ஊரைத் தாண்டிப் போக முடியும்.

கயிறு கட்டி தூக்கிவரப்படும் மூதாட்டியின் உடல்
கயிறு கட்டி தூக்கிவரப்படும் மூதாட்டியின் உடல்

எங்களைப்போல சுத்துப்பகுதியில உள்ள கிராம மக்களும் இந்த நதியைத்தான் தாண்டிப் போகணும். மழைக்காலம் வந்தாலே எங்களுக்கு பயம் வருது. இந்த நதியில மழைத் தண்ணி, வெள்ளமாப் போகும். அடுத்த ஊருக்குப் போகுற மக்கள் எல்லாரும் ஒண்ணு சேர்ந்து கயிறைக் கட்டிக் கடந்து போவோம். வைகை அணையில தண்ணி திறந்து வட்டா இழுவை அதிகமா இருக்கும். எளிதாகக் கடந்து போக முடியாது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு தடவை மழை பெய்யும்போதும், இதே கஷ்டத்தைத்தான் அனுபவிச்சுட்டுவர்றோம். இந்த நிலைமையில மழை நேரத்துல ஊருல யாராவது எதிர்பாராதவிதமா இறந்துபோயிட்டா, அவங்களோட உடலை இதே நதியைக் கடந்து தூக்கிட்டு வந்து உலக்குடியில இருக்குற மயானத்துல அடக்கம் செய்யணும்.

கயிறு கட்டி தூக்கிவரப்படும் மூதாட்டியின் உடல்
கயிறு கட்டி தூக்கிவரப்படும் மூதாட்டியின் உடல்

இந்த நதியைக் கடந்து போகுறதுக்காக ஒரு தரைப்பாலம் கட்டிக் கொடுத்துட்டா, சுத்திலும் உள்ள கிராம மக்கள் எல்லாருமே பயனடைவாங்க. பாலம் கட்டுறது சம்பந்தமா பலமுறை அரசு அதிகாரிங்ககிட்ட மனுக் கொடுத்துட்டோம். ஆனா, எந்த நடவடிக்கையுமே இல்லை. எல்லாரும் மழை பெய்யணும்னு சாமி கும்பிடுவாங்க. ஆனா, நாங்க மழை பெய்ய வேண்டாம்னு நினைச்சு சாமி கும்பிடுறோம்” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism