Election bannerElection banner
Published:Updated:

புதுச்சேரி: வெள்ளத்திலிருந்து வாகனத்தை மீட்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

ஹசீனா பேகம்
ஹசீனா பேகம்

புதுச்சேரியில் பெய்த கனமழை வெள்ளத்தில் சிக்கி பெண் ஒருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு 1:00 மணிக்குத் தொடங்கிய கனமழை சுமார் எட்டு மணி நேரத்தைக் கடந்து, நேற்று காலை விடிய விடியக் கொட்டித் தீர்த்தது. சாலை எங்கும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. நகர் முழுக்க சுமார் பத்தாயிரம் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

புதுச்சேரி வெள்ளத்தில் சிக்கிய ஹசீனாவின் வாகனம்
புதுச்சேரி வெள்ளத்தில் சிக்கிய ஹசீனாவின் வாகனம்

புதுச்சேரி சண்முகாபுரத்தை அடுத்த வடக்கு பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரின் மனைவி ஹசீனா பேகம். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். ஹசீனா பேகம் அதே பகுதியிலுள்ள மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்துவருகிறார். சண்முகாபுரம் கோட்டைப் பகுதியை ஒட்டி வாகனங்களை ஓடையில் நிறுத்திவைப்பது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு ஹசீனா பேகம், தனது இரு சக்கர வாகனத்தை ஓடையில் நிறுத்திவைத்திருந்தார்.

நெல்லை: தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; குறுக்குத்துறை முருகன் கோயிலைச் சூழ்ந்த வெள்ளம்!

நேற்று காலை எழுந்தபோது கனமழை காரணமாக ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன் காரணமாக ஹசீனா பேகம் தனது இரு சக்கர வாகனத்தை அங்கிருந்து எடுத்து வேறு இடத்தில் நிறுத்துவதற்காக முயன்றார். அப்போது வெள்ளநீரின் வேகம் காரணமாக இருசக்கர வாகனம் இழுத்துச் செல்லப்பட்டது. வாகனத்தை பிடித்திருந்த ஹசீனா பேகமும், நிலைதடுமாறி கீழே விழுந்து, வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டு, அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் வெள்ள நீரில் சிக்கி ஹசீனா பேகம் மாயமானார்.

பலியான ஹசீனா பேகம்
பலியான ஹசீனா பேகம்

இது குறித்து அந்தப் பகுதி மக்கள் தீயணைப்புதுறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். நேற்று காலை முதல் காவல்துறையினரும் தீயணைப்புத்துறையினரும் இணைந்து ஹசீனா பேகத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்தநிலையில், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பின்புறமுள்ள கனகன் ஏரியில் ஹசீனா பேகத்தின் சடலத்தை தன்வந்திரி நகர் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் கைப்பற்றினர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு