Published:Updated:

கணவனுடனான சண்டையால் 2 வயது மகளுடன் மாடியில் இருந்து குதித்த பெண்! - தெலங்கானாவில் சோகம்

கலிலுல்லா.ச

தன்னை நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்து செல்ல கணவன் மறுத்ததால் குழந்தையுடன் பெண் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்கொலை
தற்கொலை ( representation image )

கணவனுடன் ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் ஒருவர் மொட்டை மாடியிலிருந்து குதித்துள்ளார். அவர் தனது, 2 வயது கைகுழந்தையுடன் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். அவரது இரண்டு வயதுப் பெண் குழந்தை காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறது.

தற்கொலை
தற்கொலை
representation image

அந்த பெண்ணின் உடல்பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவரின் இந்த செயலுக்கு அந்த பெண்ணின் கணவர் தான் காரணமா என்று காவல்துறையினர் விசாரணை தொடங்கியுள்ளனர். இது தொடர்பாக பேசிய விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் லக்ஷ்மி நாராயணன், ``எங்கள் முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண், அவர் கணவரிடம் நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்துச்செல்லுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அவரது கணவர் மறுப்புதெரிவித்துள்ளார். இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட அந்த பெண், தற்கொலை செய்யும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மற்றபடி, அவர்கள் இருவரும் மகிழ்ச்சியான தம்பதிகளாக்கத்தான் வாழ்ந்துள்ளனர். அவர்கள் அண்மையில் இலங்கைக்கு டூர் சென்றுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

தற்கொலை
தற்கொலை
representation image

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.