Published:Updated:

`எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்; அப்படி செய்யாதீர்கள்!’- வீடியோ வெளியிட்டு அதிரவைத்த ஒடிசா இளைஞர்

இளைஞர்
இளைஞர்

காதலி பிரிந்து சென்றதால் இளைஞர் ஒருவர் இரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஷா மாநிலத்தில் கட்டக் நகரிலுள்ள மாத்ரு பவன் பகுதியின் இரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் காதல் தோல்வியால் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்வதுக்கு முன்னால் அதற்கான காரணத்தையும் செல்போனில் வீடியோவாகப் பேசி பதிவு செய்துள்ளார்.

தற்கொலை
தற்கொலை

நியாலி பகுதியைச் சேர்ந்த மனோஜ் ஸ்வெயின் என்ற இளைஞர்தான் தற்கொலை செய்துகொண்டது என அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்கொலைக்காக காரணம் குறித்து பேசியுள்ள மனோஜ், ``நான் காதலித்த பெண் என்னைப் புறக்கணித்துவிட்டு வேறொரு நபரை திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறாள். காதலில் விழுந்து விடாதீர்கள் என எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன். தனியாக விட்டுவிட்டு விலகும்படி அவள் என்னிடம் கூறினாள். என்னை அந்நியத் தன்மையுடன் நடத்தினாள். அவள் எல்லாவற்றையும் பணத்துக்காக செய்திருக்கிறாள். என்னிடம் பணம் இல்லை என்று தெரிந்ததும் என்னைப் புறக்கணித்துவிட்டாள்” என்று கூறியுள்ளார்.

`மன அழுத்தம்;கடைசியாக மனைவியிடம் பேசினார்!’ -குமரியில் திருமணமான 9 மாதத்தில் அரசு மருத்துவர் தற்கொலை

மனோஜின் குடும்பத்தினர் அவர் கொலை செய்யப்பட்டதாகக் கூறிவருகின்றனர். அவருடைய தந்தை நிமாய் ஸ்வெயின் பேசும்போது, ``நான் அவளிடம் தொலைபேசியில் பேசினேன். வேறு சாதியைச் சேர்ந்தவராக இருந்ததால் வீட்டிலுள்ளவர்களிடம் பேசி சமாதானம் செய்யும்படி கூறினேன். நேற்று, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரும்படி எனது மகனை அழைத்து கொலை செய்துள்ளனர்” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மகனின் நிதி உதவியுடன் அவள் படித்து வந்ததாகவும் படித்து முடித்ததும் மகனிடமிருந்து அவள் பிரிந்து சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரயில்
ரயில்

கையால் எழுதிய தற்கொலைக் கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மனோஜ் கட்டாக்கில் உள்ள தனியார் நிறுவம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

`பணியிடைநீக்கம்; 2 ஆண்டுகள் வழக்கு!' - இளம்பெண் தற்கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட தஞ்சை இன்ஸ்பெக்டர்
அடுத்த கட்டுரைக்கு