Published:Updated:

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்துக்குப் பலி! - தேசியப் பேரிடராக நைஜீரியா அறிவிப்பு

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்துக்குப் பலி! - தேசியப் பேரிடராக நைஜீரியா அறிவிப்பு
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்துக்குப் பலி! - தேசியப் பேரிடராக நைஜீரியா அறிவிப்பு

நைஜீரியாவில் ஜூலை முதல் செப்டம்பர் வரை பருவமழை பெய்யும் காலம். பருவகால மாற்றத்தால் ஆண்டுதோறும் நைஜீரியாவில் வெள்ளப்பெருக்கு ஏற்படத் தொடங்கிவிட்டது. நைஜீரியாவில் தற்போது பெய்து வரும் மழையால் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாகவும், வெள்ளப் பெருக்கால் பெருத்த அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் நைஜீரியா அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த வெள்ளப் பெருக்கை தேசியப் பேரிடராக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

“மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பெய்த கடும் மழையால் பல்லாயிரக் கணக்கானோர் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் நைஜீரியாவின் மத்தியப் பகுதியில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கின்றன. நைஜர் மற்றும் பெனுவே ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ள கோகி மாகாணத்தில் உள்ள நீர் நிலைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. வெள்ளம் காரணமாக இடம் பெயர்ந்த மக்களுக்கு உதவவும், வெள்ளத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணிக்காகவும் ஐந்து அவசர மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன” என நாட்டின் அவசர நிலை விழிப்பு உணர்வு நிறுவனம் நெமா (NEMA) தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மருத்துவப் பொருள்களை வழங்குவதற்கு ஜனாதிபதி முஹம்மபூரி 8.2 மில்லியன் டாலர்களை ஒதுக்கி இருப்பதாக அறிவித்துள்ளார்.