Published:Updated:

`இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது' - வீடுகளை இழந்து மக்கள் சோகம்

`இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது' - வீடுகளை இழந்து மக்கள் சோகம்
`இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியது' - வீடுகளை இழந்து மக்கள் சோகம்

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு சுனாமி தாக்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்தோனேஷியாவின் மத்திய பகுதியான சுலவேஷிப் பகுதியில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானதாக தகவல் வெளியானது. இதற்கு முன்னதாகவே உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 என்று பதிவானது. இதில் 12-க்கும் மேற்பட்டோரின் வீடுகள் சேதமடைந்தன.10 பேர் படுகாயமடைந்தனர். இந்த இரு வேறு நிலநடுக்கங்களையடுத்து, அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தற்போது பாலு(palu) டங்காலா(donggala) ஆகிய பகுதிகளில் சுனாமி தாக்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பல்வேறு வீடுகள் சேதமடைந்துள்ளன. தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால், தகவல்களைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவின் தெற்குப் பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் பயங்கரமான நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் இது 9.1 என்ற பதிவானது. இதில் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.