Published:Updated:

இந்தோனேசியாவை தாக்கிய நிலநடுக்கம்! - உயரும் பலி எண்ணிக்கை

இந்தோனேசியாவை தாக்கிய நிலநடுக்கம்! - உயரும் பலி எண்ணிக்கை
இந்தோனேசியாவை தாக்கிய நிலநடுக்கம்! - உயரும் பலி எண்ணிக்கை

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு சுனாமி தாக்கியது. இதனால், பலியானோர் எண்ணிக்கை  அதிகரித்துள்ளது. 

இந்தோனேசியாவின் மத்திய பகுதியான சுலவேசியில், நேற்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பூகம்பம் மையம்கொண்டிருந்ததாகவும், நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆகப் பதிவாகியதாகவும், அந்நாட்டு ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பாலு(palu) டங்காலா(donggala) ஆகிய பகுதிகளில் சுனாமி தாக்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளன. 

முதற்கட்ட மீட்பு நடவடிக்கையில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 9 கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும்  தகவல் வெளியாகியது. இதனால், பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கணிக்கப்பட்ட நிலையில், 30 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியது. ஆனால், தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.  நிலநடுக்கம், சுனாமி தாக்கம் ஆகியவற்றால் 384 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிகாரபூர்வ தகவலை அந்நாட்டு தேசிய பேரிடர் அமைப்பு வெளியிட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.