Published:Updated:

திருவாரூர், நாகைக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பினார் பினராயி விஜயன்!

சத்யா கோபாலன்
திருவாரூர், நாகைக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பினார் பினராயி விஜயன்!
திருவாரூர், நாகைக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பினார் பினராயி விஜயன்!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கேரளா சார்பாக முதல்வர் பினராயி விஜயன் நிவாரணப் பொருள்களை அனுப்பிவைத்துள்ளார்.

கேரளாவை புரட்டிப்போட்ட வெள்ளத்தின்போது தமிழக மீனவர்கள், தன்னார்வலர்கள் பலர் கேரளாவுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள மக்களுக்கு உதவினர். இது அம்மாநில மக்களிடத்தில் பெரும் வரவேற்பு பெற்றது. `தமிழகத்துடன் நாங்கள் எப்போதும் துணை நிற்போம், உங்களுக்காக நாங்கள் வருவோம்' எனத் தெரிவித்திருந்தனர்.

அதை அப்படியே மாறாமல் தற்போது செய்து காட்டியுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கேரள அரசு சார்பில் நிவாரண பொருள்கள் அனுப்பிவைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழக மக்களுக்கு எப்போதும் கேரளா உறுதுணையாக இருக்கும். கஜா புயல் பாதிப்பிலிருந்து தமிழக மக்கள் விரைவில் மீண்டு வர கேரளாவிலிருந்து உணவுப் பொருள்கள், தார்ப்பாய் மெழுகுவத்தி, புதுத்துணிகள் போன்றவை திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கேரள மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் அந்தப் பொருள்களை மக்களுக்கு நேரடியாக வழங்குவர்” எனத் தெரிவித்துள்ளார்.