Published:Updated:

புதுக்கோட்டையில் கஜா புயல் சேதங்கள் குறித்து மத்திய குழு ஆய்வு

புதுக்கோட்டையில் கஜா புயல் சேதங்கள் குறித்து மத்திய குழு ஆய்வு
புதுக்கோட்டையில் கஜா புயல் சேதங்கள் குறித்து மத்திய குழு ஆய்வு

கஜா புயல் சேதங்களைப் பார்வையிட மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையில் மத்தியக் குழு  சென்னை வந்தது. சென்னை வந்த மத்தியக் குழுவினர் நேற்று மாலை முதல் கட்டமாக புதுக்கோட்டையில் ஆய்வு மேற்கொண்டனர்.

புதுக்கோட்டையில் கஜா புயல் சேதங்கள் குறித்து மத்திய குழு ஆய்வு

மத்திய குழுவில், டேனியல் ரிச்சர்டுடன், மத்திய நிதித்துறை செலவினப் பிரிவு ஆலோசகர் ஆர்.பி.கவுல், ஹைதராபாத் மத்திய வேளாண்துறை பொறுப்பு இயக்குநர் பி.கே.ஸ்ரீவத்சவா, ஊரக வளர்ச்சித் துறை துணை செயலாளர் மாணிக் சந்திரா பண்டிட், எரிசக்தித் துறை தலைமைப் பொறியாளர் வந்தனா சிங்கால் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன், சென்னையில் உள்ள மத்திய நீர்வளத்துறை இயக்குநர் ஜெ.ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து துறை செயற் பொறியாளர் ஆர்.இளவரசன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குநர் அதுல்யா மிஷ்ரா ஆகியோரும் இடம் பெற்று இருந்தனர். அத்துடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  எம்.ஆர். விஜயபாஸ்கர், சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கதர் மற்றும் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர்  ஜி.பாஸ்கரன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து, புதுக்கோட்டை ஆட்சியர் கணேஷ் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளும் ஆய்வில் கலந்துகொண்டனர்.

கந்தர்வக்கோட்டையில்  கஜாபுயல் தாக்கம், சேதம் மீட்பு குழுவினருடன் நிவாரணப்பணிகள் குறித்த  மத்திய குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டையில் கஜா புயல் சேதங்கள் குறித்து மத்திய குழு ஆய்வு

முன்னதாக மத்திய குழுவினர் கந்தர்வக்கோட்டையில் துவங்கி சில இடங்களைப் பார்வையிடுவதற்கு, திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஆலங்குடி அருகே மாங்காடு மக்கள் மத்திய குழு வரும் வரையிலும், சாலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில், கடைசி நேரத்தில் பார்வையிடும் இடங்கள் மாற்றி அமைக்கப்பட்டது. கீரனூரில் துவங்கி மாங்காடு வரையிலும் மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.