Published:Updated:

கஜா புயலால் வீடிழந்த குடும்பம்; பூப்பெய்த பெண் - உதவிக்கரம் நீட்டிய கோவை இளைஞர்கள்

கஜா புயலால் வீடிழந்த குடும்பம்; பூப்பெய்த பெண் - உதவிக்கரம் நீட்டிய கோவை இளைஞர்கள்
கஜா புயலால் வீடிழந்த குடும்பம்; பூப்பெய்த பெண் - உதவிக்கரம் நீட்டிய கோவை இளைஞர்கள்

நாகப்பட்டினம் மாவட்டம், கருப்பம்புலம் கிராமத்துக்கு சீரமைப்புப் பணிக்குச் சென்ற கோவை இளைஞர்கள், அங்கு பூப்பெய்த  8-ம் வகுப்பு மாணவிக்கு சீர்வரிசை செய்தனர்.

கஜா புயலால் வீடிழந்த குடும்பம்; பூப்பெய்த பெண் - உதவிக்கரம் நீட்டிய கோவை இளைஞர்கள்

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பில் டெல்டா மாவட்டங்கள் சிதறிக் கிடக்கிறன.  நாடு முழுவதும் இருந்து, உதவிக்கரங்கள் நீண்டாலும், அந்த மக்களின் சோக வடுக்கள் காயவில்லை. வீடுகளையும், உடைமைகளையும் இழந்து, சாப்பிடுவதற்கு கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளையும், பயிர்களையும், கால் நடைகளையும் இழந்தவர்கள், பல்வேறு சோகங்களுக்கு மத்தியில் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்களுக்கு கோவையிலிருந்து ஏராளமான நிவராணப் பொருள்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கருப்பம்புலம் என்ற கிராமத்துக்குச் சென்றுள்ளனர். வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிகமாக சீரமைப்புப் பணி செய்வது, விழுந்த மரங்களை அகற்றுவது போன்ற பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்தக் கிராமத்தில், 8-ம் வகுப்பு படிக்கும் துர்கா என்ற மாணவி பூப்பெய்துள்ளார். ஆனால், அவரது வீடு புயலால் முற்றிலும் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. துர்கா வயதுக்கு வந்தத் தகவல் தெரிந்த கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், அவர்களது வீட்டை உடனடியாக சீரமைத்துக் கொடுத்துள்ளனர். மேலும், துர்காவுக்கு தேங்காய், பழம், பூ மற்றும் இனிப்புகளுடன் சீர் வரிசை செய்துள்ளனர்.

கஜா புயலால் வீடிழந்த குடும்பம்; பூப்பெய்த பெண் - உதவிக்கரம் நீட்டிய கோவை இளைஞர்கள்


 

இதுதொடர்பாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறுகையில், ``இங்கு வந்துப் பார்த்தப் பிறகுதான், நாம் எல்லாம் எவ்வளவு சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கோம் என்று தெரிகிறது. அரசாங்கத்தின் நிதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, வீட்டில் விழுந்த மரத்தை கூட அவர்களால் எடுக்க முடியவில்லை. நாம் கொடுக்கும் நல்ல உணவுகளை, அவர்கள் சாப்பிடுவதைப் பார்க்கும்போது, ஊருக்கே உணவளித்த இவர்களுக்கா இந்த நிலை என்று மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதைப் பார்த்து பலர் அழுதுவிட்டோம். இந்த சூழ்நிலையிலும் கூட, தங்களது தோட்டத்தில் போட்டுள்ள பனங்கிழங்குகளை எல்லாம் எடுத்துட்டு போங்க என்று சொல்கின்றனர் அந்த மக்கள்" என்றார்.