Published:Updated:

கஜா புயல் - டெல்டா மக்களுக்கு நேரில் சமைத்துப் பரிமாறிய கோவை மக்கள்..!

கஜா புயல் - டெல்டா மக்களுக்கு நேரில் சமைத்துப் பரிமாறிய கோவை மக்கள்..!
கஜா புயல் - டெல்டா மக்களுக்கு நேரில் சமைத்துப் பரிமாறிய கோவை மக்கள்..!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கோவையைச் சேர்ந்த மக்கள் நேரடியாகச் சென்று சமைத்துக் கொடுத்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களைப் புரட்டியெடுத்துள்ளது கஜா புயல். வீடுகள், கால்நடைகள், பயிர்கள் என்று அனைத்தையும் இழந்து, தொடர்புக்கு எல்லைக்கு வெளியே சென்றுவிட்டனர் டெல்டா மக்கள். இதையடுத்து, நாடு முழுவதும் இருந்து அந்த மக்களுக்கு உதவிக்கரம் நீண்டு வருகிறது. இந்நிலையில், கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு எதிர்ப்புக் குழுவினர், சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை நாகப்பட்டினம், வேதாரண்யம் அருகில் உள்ள கிராமங்களுக்குக் கொண்டுசென்றனர்.

முத்துப்பேட்டை, ராமகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று அவர்கள் சீரமைப்புப் பகுதிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மின்சாரம் கூட இல்லாமல் தவிக்கும் அந்த மக்களுக்கு  மூன்று வேளை சமைத்துக் கொடுத்திருக்கிறார்கள், கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு எதிர்ப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

இதுகுறித்து, வெள்ளலூர் குப்பைக்கிடங்கு எதிர்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டேனியல் ஜேசுதாஸ், "நேரில் வந்து பார்த்த பிறகுதான் பாதிப்பை நன்கு உணரமுடிகிறது. அந்த மக்கள் மன நிறைவுடன் சாப்பிட வேண்டும் என்பதால்தான் நாங்களே சமைத்துக் கொடுத்தோம், கிச்சடி, தக்காளி சாதம், வெள்ளை சாதம், சாம்பார், ரசம், உருளைக் கிழங்கு பொரியல் என்று எங்களால் முடிந்ததை சமைத்துக் கொடுத்தோம். திருப்தியாக சாப்பிட்டு, கண்ணீருடன் எங்களுக்கு நன்றி தெரிவித்து வழியனுப்பினார்கள்" என்றார்.