Published:Updated:

மீண்டும் ஒரு சுனாமி ஏற்பட வாய்ப்பு! - இந்தோனேசிய மக்களை எச்சரித்த அதிகாரிகள்

மீண்டும் ஒரு சுனாமி ஏற்பட வாய்ப்பு! - இந்தோனேசிய மக்களை எச்சரித்த அதிகாரிகள்
மீண்டும் ஒரு சுனாமி ஏற்பட வாய்ப்பு! - இந்தோனேசிய மக்களை எச்சரித்த அதிகாரிகள்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக அங்கு மேலும் ஒரு சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மீண்டும் ஒரு சுனாமி ஏற்பட வாய்ப்பு! - இந்தோனேசிய மக்களை எச்சரித்த அதிகாரிகள்

17,000-க்கும் அதிகமான சிறிய சிறிய தீவுகளை உள்ளடக்கியதுதான் இந்தோனேசியா. இதில் 6,000 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். அங்குள்ளவர்களுக்கு இயற்கை பேரிடர் நிலநடுக்கம் போன்றவை சற்று சகஜமான விஷயம்தான். இருந்தும் ஒரு வருடத்துக்குக் குறைந்தது நான்கிலிருந்து ஐந்து பெரிய இயற்கைப் பேரிடர்களையாவது அந்நாட்டு மக்கள் சந்திக்கின்றனர். இந்த பேரழிவுகளால் வருடம் தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்கின்றனர். 

மீண்டும் ஒரு சுனாமி ஏற்பட வாய்ப்பு! - இந்தோனேசிய மக்களை எச்சரித்த அதிகாரிகள்

இப்படியிருக்க இந்தோனேசியாவை தற்போது மீண்டும் ஒரு பேரிடர் தாக்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு அனாக் க்ரகடோவா பகுதியில் உள்ள மிகப்பெரிய எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவின் காரணமாக செராங், சவுத் லம்பாங் ஆகிய பகுதிகளை சுனாமி தாக்கியது. 

ஜாவா கடற்கரையில் சுந்தா ஜலசந்தியில் உள்ள அனாக் க்ரகடோவா எரிமலை சுமார் 305 மீட்டர் உயரம் கொண்டது. இது இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 200 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில்தான் புகழ்பெற்ற ஜங் குலான் தேசிய பூங்கா, புகழ்பெற்ற கடற்கரைகள் உள்ளன.

மீண்டும் ஒரு சுனாமி ஏற்பட வாய்ப்பு! - இந்தோனேசிய மக்களை எச்சரித்த அதிகாரிகள்

இந்த எரிமலை கடந்த ஜூன் மாதம் முதல் புகையை கக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் பலத்த சத்தத்துடன் எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக பௌர்ணமி நாளில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் நிலையில், நிலநடுக்கத்தின் தாக்கமும் சேர்ந்ததால் சுனாமியின் தாக்கம் அதிகரித்ததாகக் கூறுகிறார்கள். இந்த ஆழிப்பேரலையினால் இதுவரை 281 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1,016 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மீண்டும் ஒரு சுனாமி ஏற்பட வாய்ப்பு! - இந்தோனேசிய மக்களை எச்சரித்த அதிகாரிகள்

மேலும், அனாக் க்ரகடோவா எரிமலை தொடர்ந்து நெருப்புக் குழம்புகளை வெளியேற்றி வருவதால் அங்கு மேலும் ஒரு சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது தொடர்பாக இந்தோனேசியாவின் பேரிடர் மேலாண்மை வாரியத்தின் செய்தி தொடர்பாளர் சுடோபோ புர்வோ கூறுகையில், ‘ சுனாமியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ராணுவம், காவல்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை படையைச் சேர்ந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிக்குச் செல்ல வேண்டாம். எரிமலை தொடர்ந்து துடிப்புடன் உள்ளதால் மீண்டும் வெடிப்பு ஏற்படலாம் என்றும் அதனால் மற்றொரு சுனாமி தாக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் இருக்கும் பகுதிக்கு மிக அருகில் எரிமலை இருந்ததால் சுனாமி மிக எளிதில் மக்களைச் சூறையாடியுள்ளது” என்று கூறினார்.