Published:Updated:

கஜா புரட்டிப்போட்ட மலைக் கிராமங்கள்! - காடு, மலை கடந்து களத்தில் விகடன்!

கஜா புரட்டிப்போட்ட மலைக் கிராமங்கள்! - காடு, மலை கடந்து களத்தில் விகடன்!

கஜா புரட்டிப்போட்ட மலைக் கிராமங்கள்! - காடு, மலை கடந்து களத்தில் விகடன்!

கஜா புரட்டிப்போட்ட மலைக் கிராமங்கள்! - காடு, மலை கடந்து களத்தில் விகடன்!

கஜா புரட்டிப்போட்ட மலைக் கிராமங்கள்! - காடு, மலை கடந்து களத்தில் விகடன்!

Published:Updated:
கஜா புரட்டிப்போட்ட மலைக் கிராமங்கள்! - காடு, மலை கடந்து களத்தில் விகடன்!

லைவாழ் மக்களுக்கு மழையும் குளிரும் புதிதல்ல. வீட்டையே புரட்டிப்போடும் நிலச்சரிவையும், பொங்கிவரும் காட்டாறுகளையும் தங்களது பாரம்பர்ய அறிவால் எதிர்கொள்பவர்கள் அவர்கள். ஆனால், புயல் பாதிப்பு என்பது அவர்களுக்குப் புதிது. கொடைக்கானல் வரலாற்றில் முதன்முறையாக புயலின் துயரத்தை அவர்கள் எதிர்கொண்டிருக் கிறார்கள். அவர்களின் வீடுகள், சாலைகள், உணவு ஆதாரங்கள் அனைத்தையும் குலைத்துப்போட்டிருக்கிறது கஜா. அரசுத் தரப்பில் இவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்காத சூழலில், நிவாரணப் பொருள்களுடன் மலையேறியது விகடன் டீம்!

கஜா புரட்டிப்போட்ட மலைக் கிராமங்கள்! - காடு, மலை கடந்து களத்தில் விகடன்!

‘வாய்ஸ்’ அமைப்பின் மைக்கேல் என்பவர் நம்மை அந்தக் கிராமங்களுக்கு அழைத்துச் சென்றார். கடும் பாதிப்புக்கு உள்ளான செம்பரான்குளம், கருவேலம்பட்டி, மேல்மலை கிராமமான மூங்கில் பள்ளம் ஆகிய மூன்று கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, ‘வாசன் சாரிடபிள் டிரஸ்ட்’ மூலமாக நிவாரணப் பொருள்களை வழங்கத் தீர்மானித்தோம். இதில் செம்பரான்குளம்வரை மட்டுமே தார்ச்சாலை இருக்கிறது. அங்கிருந்து ஏழு கி.மீ தூரத்தில் இருக்கும் கருவேலம்பட்டிக்கு, கரடுமுரடான பாறைகள் நிறைந்த மலைப்பாதையில்தான் செல்ல வேண்டும். அதில் நான்குச் சக்கரங்களும் சுழலக்கூடிய வகையிலான ‘ஃபோர்வீல் டிரைவ்’ வாகனங்கள் மட்டுமே ஏற முடியும். அப்படியான வாகனத்தில் அங்கு பயணமானோம். வழியெங்கும் வேரோடு சாய்ந்துகிடந்தன மரங்கள். அவற்றை அப்புறப்படுத்திவிட்டுப் பயணித்தோம். வழியில் இரண்டு காட்டாறுகளைக் கடக்க வேண்டியிருந்தது. ஓர் இடத்தில் காட்டாறு அரித்ததால், பாதை துண்டாகியிருந்தது. அங்கு, கற்களைப்போட்டு பாதை உருவாக்கிப் பயணத்தைத் தொடர்ந்தோம். மூன்று மணி நேர சவாலான பயணத்துக்குப் பிறகு கருவேலம்பட்டியை அடைந்தோம்.

சுமார் முப்பது குடிசைகள் கொண்ட சிறிய ஊர். மைதானத்தில் மக்கள் கூடியிருந்தனர். அரிசி, மளிகைப் பொருள்கள், கம்பளி போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை ஒவ்வொரு குடும்பத்துக்கும் வழங்கினோம். முத்துச்சாமி என்பவர், “மலையில புல் அறுத்து அதில்   துடைப்பம் தயாரித்து  விக்கிறதுதான் எங்களுக்குப் பொழப்பு. இடையில காபி பழம் எடுக்கப்போவோம். எங்க கிராமத்துக்கு, பாதை இல்லை. ஆஸ்பத்திரி உட்பட எந்த வசதியும் இல்லை. யாருக்காச்சும் உடம்பு சரியில்லைன்னா தூளி கட்டித் தூக்கிட்டு, ஆத்தைக் கடந்து பத்து மைல் தூரமிருக்கிற பாச்சலூருக்குதான் போகணும். இடையில யானைங்க நடமாட்டம் வேற இருக்கும். பலர் வழியிலேயே செத்திருக்காங்க. பிரசவம் எல்லாம்கூட வீட்டுலேதான். செம்பரான் குளத்தில அரசு ஆஸ்பத்திரி வேணுமுங்க. இங்க இருக்கிற ஒண்ணு ரெண்டுப் பிள்ளைங்களைத் தவிர, மத்த யாருக்கும் பிறப்புச் சான்றிதழ், சாதி சான்றிதழ்கூட இல்லை. செம்பரான்குளத்துலதான் ரேஷன் கடை இருக்கு. அங்கிருந்து இருபது கிலோ இலவச அரிசியை, குதிரையில வெச்சுக் கொண்டு வர 200 ரூபாய் செலவாகுது” என்றார் வேதனையுடன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கஜா புரட்டிப்போட்ட மலைக் கிராமங்கள்! - காடு, மலை கடந்து களத்தில் விகடன்!

அங்கிருந்து கிளம்பி செம்பரான்குளத்தில் பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கினோம். மறுநாள் கொடைக்கானல் மேல்மலை கிராமமான மூங்கில் பள்ளத்துக்குக் கிளம்பினோம். மன்னவனூரை அடுத்துள்ள கும்பூர் கிராமத்திலிருந்து பிரியும் ஒற்றையடிப் பாதையில் ஒன்பது கி.மீ நடந்தால்தான், அந்தக் கிராமத்தை அடைய முடியும். போகும் வழியில் ஏணிப்பள்ளம் என்ற இடம் இருக்கிறது. பாறையில் இரும்பு ஆணிகள் அடிக்கப்பட்டிருக்கும். அதில் கால் வைத்துத்தான் மேலே ஏறிச்செல்ல வேண்டும். ரேஷன் அரிசியை வாங்கிக்கொண்டு, இதன் வழியாக ஏறித்தான் தங்கள் கிராமத்தை அடைகிறார்கள் மக்கள். அங்கும் நிவாரணப் பொருள்களை அளித்தோம். ‘விகடன்’ வாசகர்கள் கொடுத்த நிவாரணப் பொருள்கள், அவர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தைக்கொண்டு வந்துவிடாதுதான். ஆனால்,அது அவர்களின் காயங்களுக்கான மருந்தாக இருக்கும். அவர்களுக்கான நிரந்தரமான அடிப்படைத் தேவைகளை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்.

- விகடன் டீம்

ஆசிரியர் வராத பள்ளி!

ருவேலம்பட்டி கிராமத்தில் ஐந்தாம் வகுப்புவரை தொடக்கப்பள்ளி உள்ளது. ஒரு தலைமையாசிரியர் மற்றும் ஓர் ஆசிரியர் பணியாற்றுகிறார்கள். ஆனால், பாதை சரியாக இல்லாததால் அவர்கள் எப்போதாவதுதான் பள்ளிக்கு வருகிறார்கள். நாம் சென்றிருந்த நாள் திங்கள்கிழமை. அன்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை. அடிக்கடி இதே நிலை தொடர்வதால், மாணவர்களின் படிப்பு முற்றிலும் முடங்கியிருப்பதாக மக்கள் கவலையுடன் தெரிவித்தனர். தொலைதூரத்திலிருந்து ஆசிரியர்கள் இங்கு வருவதால்தான் பிரச்னை. அருகில் மலைக் கிராமங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு ஆசிரியர் பணி கொடுத்தால், அவர்கள் தினமும் பள்ளிக்கு வருவார்கள். மாணவர்களுக்கும் முறையான படிப்பு கிடைக்கும். பள்ளிக்கல்வித் துறை கவனிக்குமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism