‘கண்ணுக்கெட்டுன தொலைவுக்கு கடல் இருந்தாலும், உப்புத் தண்ணியவா மொண்டு குடிக்க முடியும்...’ என்று கண்ணீர் வடிக்கிறார்கள் நாகப்பட்டினம் மக்கள். இங்குள்ள கடலோரக் கிராமங்களில் நிலவும் குடிநீர்ப் பஞ்சத்தை, வார்த்தைகளால் வடிக்க இயலாது. சீர்காழி, தரங்கம்பாடி, மாணிக்கப்பங்கு, பெருமாள்பேட்டை, நாயக்கர் குப்பம், வாணகிரி, திருமுல்லைவாசல் உள்ளிட்ட 26 மீனவக் கிராமங்களுக்கு, போர்வெல் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் செயல்பட்டுவரும் இறால் பண்ணைகளால், நிலத்தடி நீரும் உப்புநீராக மாறிவிட்டது. இதனால், இங்கெல்லாம் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. இதையடுத்து, பெருந்தோட்டம் ஏரியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, அங்கிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது.

கடும் வறட்சியால், பத்து நாள்களுக்கு ஒரு முறை... அதுவும், சில மணி நேரம்தான் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த நீரும் சேறுடன் கலந்துவருவதால், பாத்திரங்களில் நீரைப் பிடித்துத் தெளியவைத்தப்பின்பே பயன்படுத்த முடிகிறது என்கிறார்கள் மக்கள். இந்த வறட்சியைச் சாதகமாக்கிக்கொள்ளும் தனியார் டேங்கர் லாரி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள் துணையுடன் விவசாயக் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்கிறார்கள். ஆடு, மாடுகளும் தண்ணீர் தேடி அலைவது பரிதாபமாக இருக்கிறது.

தரங்கம்பாடி அருகே பெருமாள் பேட்டையைச் சேர்ந்த ஜோதிமணி, “இங்கிருக்கிற கோயில் குளம் பக்கத்துல தான், கொஞ்சம்போல நல்ல தண்ணி கிடைக்கும். வசதியுள்ளவங்க பம்பு இறக்கி வெச்சிருக்காங்க. அவங்க தேவைக்கு எடுத்துக்கிட்டு, பூட்டி வெச்சிடுவாங்க. இந்தத் தண்ணிய குளிக்கிறதுக்கும் பாத்திரம் கழுவறதுக்கும்தான் பயன்படுத்த முடியும். குடிக்கிறதுக்கு காசு கொடுத்து தான் தண்ணி வாங்கணும்” என்கிறார் வேதனையுடன்.

கடலோரக் கிராம மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய, கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரிவுபடுத்தி, குடிநீர் வழங்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்!

- மு.ராகவன்,
படம்: பா.பிரசன்னா.