நாமக்கல் - தாகம் தீர்க்காத திட்டங்கள்!

கடந்த நான்கு ஆண்டுகளில், நாமக்கல் மாவட்டம் முழுவதும் குடிநீர் தொடர்பான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார் அமைச்சர் தங்கமணி. ஆனாலும், மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது.

ராசிபுரம், குருசாமிபாளையம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு பகுதிகளில் மக்கள் காலிக் குடங்களுடன் அடித்துக்கொள்வது சகஜமான காட்சிகளாகிவிட்டன. வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாள்கள் மட்டுமே குழாய்களில் தண்ணீர் வருகிறது. அதுவும் உப்புத் தண்ணீர். நல்ல தண்ணீர் மாதத்துக்கு இரண்டு முறை வருவதே அபூர்வம். கோடைகாலத்தில், ஏரிகளிலும் குளங்களிலும் நீர் இல்லாததால், ஆழ்துளைக் கிணறுகளைத்தான் மக்கள் நம்பியிருக்கிறார்கள். தற்போது ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இதனால் தண்ணீர் வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது. குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத சூழ்நிலையில், விவசாயிகள் பாசனம் செய்ய முடியாமல் கடும் அவதியில் உள்ளனர்.

சேந்தமங்கலம், குமாரபாளையம் மற்றும் கொல்லிமலை ஆகிய பகுதிகளில் நிலைமை பரவாயில்லை. சமீபத்தில் திருச்செங்கோட்டில் சுமார் 170 கோடி ரூபாய் மதிப்பில் குடிநீர்த் திட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம் பெயரளவுக்கே உள்ளது. இதைச் செயல்படுத்தினால், குடிநீர்ப் பஞ்சம் குறையும்.

- ஆர்.ரகுபதி

திருப்பூர் - வந்ததோ பிழைப்பு தேடி... அலைவதோ தண்ணீர் தேடி!

திருப்பூரில் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் தண்ணீர் பற்றாக்குறை மக்களை தீவிரமாக வதைக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் 15 நாள்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் ஒரு மணிநேரத்துக்கும் குறைவாகத்தான் திறக்கப்படுகிறது. போதிய அளவில் குடி தண்ணீர் கிடைக்காததால் தவித்து வருகிறார்கள் மக்கள்.

திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் இருக்கின்றன. புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 30 வார்டுகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் சுமார் ஐந்து லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர், பிழைப்பு தேடி திருப்பூருக்கு வந்த கூலித்தொழிலாளர்கள். திருப்பூரில் ஜவுளித் தொழில் நலிவடைந்துவரும் நிலையில், இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.300 வரை மட்டுமே கூலி கிடைக்கிறது. அதில், தினசரி தண்ணீருக்கு மட்டுமே எண்பது ரூபாய் செலவு செய்கிறார்கள் இவர்கள். தண்ணீரை இவ்வளவு விலை கொடுத்து வாங்க இயலாதவர்களுக்கு அக்கம் பக்கத்தில் தண்ணீரைத் தேடி அலைவதே பெரும்பாடாக இருக்கிறது.

திருப்பூரில் இதுவரையில் மூன்று குடிநீர்த்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. நான்காவது குடிநீர் திட்டமும் தொடக்க நிலையில் உள்ளது. அத்துடன் மத்திய அரசின் ‘அம்ரூத்’ திட்டத்தின் கீழ் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர்த் திட்ட விரிவாக்கப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆனால், பணிகள் அனைத்தும் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதால், திருப்பூருக்கு இன்னமும் நிரந்தரத் தீர்வு கிடைத்தபாடில்லை.

- தி.ஜெயப்பிரகாஷ்

தேனி - முல்லைப் பெரியாறு தண்ணீர் வருமா... காத்துக்கிடக்கும் ஆண்டிபட்டி மக்கள்!

தேனி மாவட்டத்தில், அதிக அளவு போர்வெல்கள் போடப்பட்ட கிராமங்களில் ஒன்று ஆத்தங்கரைப்பட்டி. அந்த அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை. ஒவ்வொரு வீட்டிலும் மூன்று அல்லது நான்கு போர்வெல்கள் போடப்பட்டிருக்கின்றன. ஆனாலும், தண்ணீர் இல்லை என்பதுதான் வேதனை. மூலவைகையில் தண்ணீர் வந்தால், இந்த ஊரில் நான்கு நாள்களுக்கு போர்வெல்லில் தண்ணீர் கிடைக்குமாம். சின்னச்சுருளி அருவிக்கு அருகில் இருக்கும் குமணன்தொழு கிராம மக்களின் பாடு, இன்னமும் மோசம். அருவியில் எப்போது தண்ணீர் வரும் என்று இரவு பகலாகக் காத்துக்கிடக்கிறார்கள். அருவி வறண்டு கிடப்பதால், காசு கொடுத்துக் குடிநீர் வாங்கும் சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

‘முல்லைப் பெரியாற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டும்’ என்ற கோரிக்கையுடன் பல ஆண்டுகளாகப் போராடிவருகிறார்கள் ஆண்டிபட்டி வட்டார மக்கள். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், ஆண்டிபட்டி பகுதி பயனடையும் வகையில் ஒரு திட்டம் தீட்டப்பட்டது. முல்லைப்பெரியாறு ஆற்றின் லோயர்கேம்ப் பகுதியிலிருந்து கே.கே.பட்டி வழியாக 47 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் வழியாகக் கணேசபுரம் கண்மாய்க்குத் தண்ணீர் கொண்டுவந்து, அங்கிருந்து 50 கண்மாய்களை நிறைக்கும் திட்டம் அது. அந்தத் திட்டம் கொண்டுவரப் பட்டிருந்தால், குடிநீருக்கும் விவசாயத்துக்கும் தண்ணீர் கிடைத்திருக்கும். ஆனால், பல்வேறு காரணங்களால் அது கிடப்பில் போடப்பட்டுவிட்டது. தற்போது, விவசாயிகளே இணைந்து ஒரு பொறியாளர் மூலம் அந்தத் திட்டத்துக்கு வரைவு அறிக்கையைத் தயார் செய்து தமிழக அரசிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள். அப்போதும் அசையவில்லை அரசு. கடந்த ஆண்டு முல்லைப் பெரியாற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் மூலமாக வைகை அணை மூன்று முறை நிரம்பியிருக்கிறது. ஆனாலும் தண்ணீர் பிரச்னை தீர்ந்தபாடில்லை.

- எம்.கணேஷ்,
படம்: வீ.சக்தி அருணகிரி.