சமீப காலமாகக் கடும் வறட்சியில் தவிக்கிறது, தமிழகம். கிட்டத்தட்ட மாநிலம் முழுவதும் தண்ணீருக்காகத் தவித்துவரும் நிலைமையில், காடுகளின் நிலைமையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு வனச் சரகத்தில் தண்ணீர் இல்லாமல் மான்கள் இறந்துவருவது அதிகரித்துவருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருப்போரூர், பரனூர், மறைமலை நகர் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான காப்புக் காடுகள் இருக்கின்றன. இங்கெல்லாம் கடும் வெயில் மற்றும் மழையின்மை காரணமாகத் தாவரங்கள் எல்லாம் சருகுகளாக மாறிவிட்டன. மான், மயில், குரங்கு, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் பலவும் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் வனத்தைவிட்டு வெளியேறி வருகின்றன. இப்படி வரும் விலங்குகள் வாகனங்களில் அடிபட்டும் மற்ற விலங்குகளால் தாக்கப்பட்டும் உயிரிழக்கும் சோகம் அடிக்கடி நடக்கிறது. சிறுத்தை, யானை, காட்டு மாடு போன்ற விலங்குகள் வனத்தைவிட்டு வெளியேறும்போது மனிதர்களும் விலங்குகளும் தாக்கிக்கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

இதுகுறித்துப் பேசிய சில சமூக ஆர்வலர்கள், “சாலூர், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் ஏராளமான மான்களும் மயில்களும் இருக்கின்றன. அவை தண்ணீருக்காக விவசாய நிலங்களைத் தேடி வெளியே வருகின்றன. இப்படி வரும் மான்களை நாய்கள் கடித்துக் குதறிவிடுகின்றன. சாலூர் காப்புக் காட்டின் சில பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுத் தோப்புகளாக மாறிவிட்டன. தோப்புக்குள் மான்கள் வராமல் இருக்க, கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேடிவரும் மான்கள், கம்பி வேலிகளில் சிக்கியும் கிணற்றில் விழுந்தும் இறக்கின்றன. சமீப காலத்தில் நிறைய மான்கள் இப்படி இறந்துள்ளன. மான்கள் இறப்பதை வனத்துறையினர் கண்டுகொள்வதில்லை. வன விலங்குகளுக்காகத் தண்ணீர் தொட்டி அமைக்கப் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அந்தத் திட்டம் முறையாகச் செயல்படவில்லை.

செங்கல்பட்டு, திருப்போரூர், பரனூர், ஆப்பூர், சிங்கப்பெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துவிட்டன. காட்டை ஒட்டிய பகுதிகளில் சில விவசாய நிலங்களாகவும் குடியிருப்புகளாகவும் மாறிவிட்டன. போக்குவரத்து எளிதாக இருப்பதால், வனங்கள், சமூக விரோதிகளின் கூடாரங்களாகவும் மாறிவிட்டன” என்றனர்.

செங்கல்பட்டு வனச் சரகர் (பொறுப்பு) நரசிம்மனிடம் பேசியபோது, “காப்புக்காடு பகுதிகளில் தண்ணீர் தொட்டிகளை அமைத்து வருகிறோம். செங்கல்பட்டு பகுதியில் திருக்கழுக்குன்றம், அஞ்சூர், பரனூர் ஆகிய பகுதிகளில் 12 தொட்டிகள் கட்டியிருக்கிறோம். செங்கல்பட்டு சரகத்தில் உள்ள சாலூர் பகுதியில் நான்கு மான்கள் மட்டுமே இறந்துள்ளன. வனப் பகுதிக்குள் செல்லும், நாய்களை விரட்ட ஊழியர்களை நியமித்துள்ளோம்” என்றார்.

தொட்டி கட்டினால் போதுமா… அதில் தண்ணீர் நிரப்ப வேண்டாமா என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வி!

- பா.ஜெயவேல்