Published:Updated:

துவம்சம் செய்த ஃபானி புயல்; தத்தளிக்கும் மக்கள்!- ஒரு வழியாய் கரையைக் கடந்தது

துவம்சம் செய்த ஃபானி புயல்; தத்தளிக்கும் மக்கள்!- ஒரு வழியாய்  கரையைக் கடந்தது
துவம்சம் செய்த ஃபானி புயல்; தத்தளிக்கும் மக்கள்!- ஒரு வழியாய் கரையைக் கடந்தது

ஃபானி புயல் ஒடிசா மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து மீள வழியில்லாமல் அப்பகுதி மக்கள் தத்தளித்து வருகின்றனர்.

துவம்சம் செய்த ஃபானி புயல்; தத்தளிக்கும் மக்கள்!- ஒரு வழியாய்  கரையைக் கடந்தது

வங்கக்கடலில் உருவான ஃபானி புயலானது அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று ஒடிசாவின் புரி பகுதியில் இன்று பகல் கரையைக்கடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சரியாக காலை  8  மணிக்கு அளவில் புயல் கரையைக்கடக்க தொடங்கியது. புயலின் காரணமாக கடலோரம் வசிக்கும் 11 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தபட்டனர். புயல்  கரையை கடக்கும்போது மணிக்கு 200 கி.மீட்டருக்கு பலத்த காற்று வீசும், மிக பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

துவம்சம் செய்த ஃபானி புயல்; தத்தளிக்கும் மக்கள்!- ஒரு வழியாய்  கரையைக் கடந்தது

அதன்படி, ஒடிசாவின் பலத்த காற்றுடன் நேற்று இரவு முதல் மழை பெய்யத்தொடங்கியது. ஒடிசாவின் புரி பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ வேகத்தில் வீசிய காற்றால் பல பகுதியில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஒடிசா மாநிலத்தில் உள்ள கோபால்பூர் - சந்த்பாலி பகுதிகளுக்கு இடையே ஃபனி புயல் இன்று காலை கரையை கடக்கத் தொடங்கியது.

புபனேஸ்வர் பகுதியில் உள்ள கிரேன் ஒன்று வீசிய காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் வீடுகள் மீது விழும் காட்சிகள் மனதை பதபதைக்க வைக்கின்றது.

துவம்சம் செய்த ஃபானி புயல்; தத்தளிக்கும் மக்கள்!- ஒரு வழியாய்  கரையைக் கடந்தது

1999-ம் ஆண்டுக்குப்பிறகு வந்த சூப்பர் புயலுக்குப்பிறகு ஒடிசாவை பாதிக்கும் மோசமான புயல் இதுவென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 1999-ம் ஆண்டு ஒடிசாவை தாக்கிய புயலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 43 ஆண்டுகளில் இந்தியாவின் கடலோரப்பகுதியில் இது போன்ற கடுமையான புயல் உருவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துவம்சம் செய்த ஃபானி புயல்; தத்தளிக்கும் மக்கள்!- ஒரு வழியாய்  கரையைக் கடந்தது

மின் கோபுரங்கள் சாய்ந்ததால் ஏராளமான பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. வீடுகளின் கூரைகள் பறந்தன. செல்போன் கோபுரங்கள் சாய்ந்ததால் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஏராளாமான மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. புகழ்பெற்ற ஜெகன்னாதர் கோயில் உள்ள பூரி நகரத்தை தண்ணீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதிவாசிகளை தொடர்புகொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திய ஃபானி புயல் ஒருவழியாக கரையைக் கடந்தது. புயல் நிவாரண நடவடிக்கைகளுக்காக ரூ.1000 கோடி விடுவித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Vikatan