Published:Updated:

2 மணி நேர ருத்ர தாண்டவம்; காற்றில் பறந்த கார்கள்! - ஃபானியால் நிலைகுலைந்த ஒடிசா

2 மணி நேர ருத்ர தாண்டவம்; காற்றில் பறந்த கார்கள்! - ஃபானியால் நிலைகுலைந்த ஒடிசா
2 மணி நேர ருத்ர தாண்டவம்; காற்றில் பறந்த கார்கள்! - ஃபானியால் நிலைகுலைந்த ஒடிசா

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஃபானி புயல் நேற்று காலை ஒடிசா மாநிலம் புரி பகுதியில் கரையைக் கடந்தது. காலை 8 மணிக்குக் கரையை கடக்கத் தொடங்கிய இந்தப் புயல் 10 மணி வரை நீடித்தது. இதனால் சுமார் 200 கி.மீ வேகத்தில் காற்று வீசியுள்ளது. 1999-ம் ஆண்டுக்குப் பிறகு, ஒடிசாவைத் தாக்கிய மிகப் பயங்கரமான புயல் இது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த 43 வருடங்களுக்குப் பிறகு கோடைக் காலத்தில் உருவாக்கியுள்ள மிகப் பெரிய புயலாகவும் இது பார்க்கப்படுகிறது. 

2 மணி நேர ருத்ர தாண்டவம்; காற்றில் பறந்த கார்கள்! - ஃபானியால் நிலைகுலைந்த ஒடிசா

ஃபானி புயல் ஒடிசா மாநிலத்தைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும். 200 கிமீ வேகத்தில் வீசிய காற்றால் வீட்டின் கூறைகள், கட்டடத்தின் மேற்பகுதி, மரங்கள், மின் கம்பங்கள் ஆகியவை பிய்த்துக்கொண்டு பறந்துள்ளன. இந்தப் புயலால் இதுவரை எட்டு பேர் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் தெரிக்கப்படவில்லை. ஒடிசா மாநிலம் முழுவதும் தாழ்வான பகுதிகளில் இருந்த 12 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 5,000 உணவு தயாரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முகாம்களில் உள்ள மக்களுக்குப் பல இடங்களிலிருந்தும் நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

2 மணி நேர ருத்ர தாண்டவம்; காற்றில் பறந்த கார்கள்! - ஃபானியால் நிலைகுலைந்த ஒடிசா


புயல் தொடர்பாக நேற்று அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் மூத்த அதிகாரிகளுடன் மீளாய்வு கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் பேசிய முதல்வர், “ புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு செய்தேன். எங்களின் முதல் நோக்கம் ஆபத்தான பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதுதான். நேற்று 24 மணி நேரத்தில் சுமார் 12 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஃபானி புயலின் தாக்கம் இன்னும் ஒடிசாவில் உள்ளது. அதனால் புயல் முழுவதுமாக ஒடிசாவைவிட்டு நகர்ந்த பிறகே, மாநிலம் முழுவதும் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து கூற முடியும். 

2 மணி நேர ருத்ர தாண்டவம்; காற்றில் பறந்த கார்கள்! - ஃபானியால் நிலைகுலைந்த ஒடிசா

மின்கம்பங்கள், மரங்கள் விழுந்ததில் பல இடங்களில் மின்சாரங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சரி செய்து பொதுமக்களுக்கு மின் விநியோகம் செய்வதுதான் தற்போது மிகவும் சவாலாக உள்ளது. நாளைக்குள் எப்படியேனும் இவை அனைத்தும் சரிசெய்யப்பட்டு மின் விநியோகம் வழங்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார். 

2 மணி நேர ருத்ர தாண்டவம்; காற்றில் பறந்த கார்கள்! - ஃபானியால் நிலைகுலைந்த ஒடிசா

தற்போது இந்தப் புயல் வலுவிழந்து மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அங்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பலத்த மழை பொழியும் எனவும் கூறப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 12 மணியளவில் ஃபானி புயல் வட- கிழக்கு நோக்கி நகரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

2 மணி நேர ருத்ர தாண்டவம்; காற்றில் பறந்த கார்கள்! - ஃபானியால் நிலைகுலைந்த ஒடிசா

ஒடிசாவை தாக்கிய ஃபானி புயல் தொடர்பான பல வீடியோக்களும் புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அவ்வாறு பகிரப்படும் ஒவ்வொரு வீடியோக்களும் மனதைப் பதைபதைக்க வைக்கின்றன. கார்களும் பேருந்துகளும் காற்றில் தூக்கிவீசப்பட்டன. ‘ஒடிசாவுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்’ என்றும், ‘இது ஒரு அதிபயங்கரமான நாள்’ ‘அனைவரும் பாதுகாப்பாகவும் நம்பிக்கையாகவும் இருங்கள்’ என்ற வாசகங்களுடன் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

Vikatan