Published:Updated:

உணவு, மின்சாரம் இல்லாமல் தவிக்கும் 35 லட்சம் மக்கள்! - ஃபானியால் இருளில் மூழ்கிய ஒடிசா

உணவு, மின்சாரம் இல்லாமல் தவிக்கும் 35 லட்சம் மக்கள்! - ஃபானியால் இருளில் மூழ்கிய ஒடிசா
உணவு, மின்சாரம் இல்லாமல் தவிக்கும் 35 லட்சம் மக்கள்! - ஃபானியால் இருளில் மூழ்கிய ஒடிசா

வங்கக்கடலில் உருவான ஃபானி புயல், மே 3-ம் தேதி பூரி பகுதியில் கரையைக் கடந்தது. மணிக்கு சுமார் 200 கி.மீ வேகத்தில் வீசிய காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கன மழை ஆகியவற்றால் ஒடிசா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மின் கம்பங்களும் செல்போன் கோபுரங்களும் சாய்ந்ததால் மின்சாரம், தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன. ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். 

உணவு, மின்சாரம் இல்லாமல் தவிக்கும் 35 லட்சம் மக்கள்! - ஃபானியால் இருளில் மூழ்கிய ஒடிசா

சுமார் 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவைத் தாக்கும் மிகக் கடுமையான புயல் இது என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. இந்தக் கொடூர புயல் தாக்குதலுக்கு 43 பேர் பலியாகியுள்ளனர். புயலினால் உயிர்ச் சேதம் பெரிதாக இல்லை என்றாலும் மக்கள் சந்தித்து வரும் இன்னல்கள் ஏராளம். ஃபானி புயல் ஒடிசாவைத் தாக்கி கிட்டத்தட்ட ஒரு வாரத்தைக் கடந்துவிட்ட நிலையிலும் அங்குள்ள கடலோர கிராமங்களில் வாழும் மக்களுக்கு உணவு, மின்சாரம், குடிநீர் போன்ற எந்தச் சேவையும் முறையாகச் சென்று சேரவில்லை. அந்த மாநிலத்தில் உள்ள 50 சதவிகிதம் பேருக்கு இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை. சுமார் 35 லட்சம் மக்கள் இருளில் வாழ்ந்து வருகின்றனர். 

உணவு, மின்சாரம் இல்லாமல் தவிக்கும் 35 லட்சம் மக்கள்! - ஃபானியால் இருளில் மூழ்கிய ஒடிசா

ஃபானி புயல், தன் கோர முகத்தைக்காட்டிய புரி, நிமபடா, மஞ்சேஷ்வர் மற்றும் ரன்சிங்பூர் ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் மின்சாரம் வேண்டி தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதுபற்றி பேசிய ஒடிசா மாநில மின்சாரத் துறைச் செயலர் ஹேமந்த் மிஸ்ரா, ``வழக்கமாகத் தாக்கும் புயலின்போது ஏற்படும் பாதிப்பைவிட ஃபானி புயல் மிகவும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

உணவு, மின்சாரம் இல்லாமல் தவிக்கும் 35 லட்சம் மக்கள்! - ஃபானியால் இருளில் மூழ்கிய ஒடிசா

மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள மின் தடையை சரிசெய்யக் குறைந்தது ஒரு மாதமாவது எடுக்கும். வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 7000 மின்வாரிய ஊழியர்களை அழைத்து வந்து 24 மணி நேரமும் வேலை செய்து வருகிறோம். நேற்று இரவுகூட புவனேஷ்வரின் சில பகுதிகளில் மின்சாரம் சரிசெய்யப்பட்டது. மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வது மிகவும் சவாலாக உள்ளது. அதுவரை பொதுமக்கள் எங்களுக்கு உதவ வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Vikatan