வங்கக் கடலில் உருவாகியிருக்கும் நிவர் புயல் சென்னைக்கு அருகே 450 கி.மீ தூரத்தில் நிலைகொண்டிருக்கிறது. இந்தப் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகரும் நிவர் புயல், நாளை மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்தநிலையில் தமிழக அரசு அவசர உதவி எண்களை அறிவித்திருக்கிறது.

1077 - மாவட்ட அவசர உதவி எண். அந்தந்த மாவட்டத்துக்கான கோடு நம்பரை சேர்த்து 1077 என்ற எண்ணை அவசர உதவிக்காகத் தொடர்புகொள்ளலாம்.
கடலோர மாவட்டங்களுக்கான மாவட்ட அவசர செயல்பாட்டு மையங்களின் எண்கள்!
கடலூர் - 04142-220700
செங்கல்பட்டு - 044-27237207
கன்னியாகுமரி - 04652-231077
நாகப்பட்டினம் - 04365-252500
புதுக்கோட்டை - 04322-222207
ராமநாதபுரம் - 04567-230060
தஞ்சாவூர் - 04362-230121
தூத்துக்குடி - 0461-2340101
திருநெல்வேலி - 0462-2501070
திருவள்ளூர் - 044-27664177, 044-27666746
திருவாரூர் - 04366-226623
விழுப்புரம் - 04146-223265
சென்னை - 044-1077.. அதேபோல் நிவர் புயல் பாதிப்புகள் குறித்து சென்னை மக்கள் 1913 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 044-2538 4530, 044-2538 4540 என்ற அவசர எண்களிலும் மக்கள் புகாரளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மற்ற மாவட்டங்களுக்கான அவசர செயல்பாட்டு மைய எண்கள்!


தமிழக அரசு செயலி!

`TNSMART' என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்து நிவர் புயல் குறித்த அனைத்துத் தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்தச் செயலியில் அவசர உதவி எண்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டிருக்கும் அவசர உதவி எண்கள் தவிர சில மாவட்ட நிர்வாகங்களும், நிவர் புயலுக்கான அவசர உதவி எண்களை வெளியிட்டிருக்கின்றன.

கடலூர் மாவட்டம்
ஆட்சியர் அலுவலகம் - 04142-220700, 04142-233933, 04142-221383, 04142-221113
வருவாய்த்துறை அலுவலகம் - 04142-231284
விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் - 04143-260248
சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் - 04144-222256. 04144-290037
புதுக்கோட்டை மாவட்டம்
கட்டுப்பாட்டு அறை எண் - 04322-222207
செங்கல்பட்டு மாவட்டம்
கட்டுப்பாட்டு மைய எண் - 044-27427412, 044-27427414
ராணிப்பேட்டை மாவட்டம்
கட்டுப்பாட்டு மைய எண் - 04172-273166, 04172-273189
புதுச்சேரி
கட்டணமில்லா அவசர உதவி எண் - 1070/ 1077
காரைக்கால்
கட்டணமில்லா அவசர உதவி எண் - 1070/ 1077
கட்டுப்பாட்டு அறை எண் - 04368-228801, 04368-227704
சென்னை மக்கள் பயன்பாட்டிற்காக...
தொடர் மழையால் வீடுகளுக்குள் பாம்பு போன்றவை நுழைந்தால், கீழே உள்ள எண்கள் மூலமாக வனத்துறையை தொடர்பு கொள்ளலாம் என வேளச்சேரி வனச்சரக அதிகாரி கூறியுள்ளார்.
044-22200335, 95661 84292
காவலர் அதிகாரிகள் பணியில் இருப்பார்கள். அவசர தேவைக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

