Published:Updated:

வெள்ளத்தில் மூழ்கிய மருத்துவமனை; நோயாளிகளுக்கு தெருவில் வைத்து கீமோதெரபி!

கச்சார் புற்றுநோய் மருத்துவமனை ( twitter )

வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாவதற்கு முன்பு 20 சிகிச்சைகள் வரை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த வாரத்தில் வெள்ள பாதிப்பால் 4 அறுவைசிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.

வெள்ளத்தில் மூழ்கிய மருத்துவமனை; நோயாளிகளுக்கு தெருவில் வைத்து கீமோதெரபி!

வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாவதற்கு முன்பு 20 சிகிச்சைகள் வரை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த வாரத்தில் வெள்ள பாதிப்பால் 4 அறுவைசிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.

Published:Updated:
கச்சார் புற்றுநோய் மருத்துவமனை ( twitter )

அஸ்ஸாம் மாநிலம் பராக் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது, 150 படுக்கையறைகளைக் கொண்ட கச்சார் புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம். இப்பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர மழை வெள்ளத்தால் மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகளுக்குத் தெருவில் வைத்து சிகிச்சை அளிக்கும் காட்சி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சை அளிக்கும் காட்சி
சிகிச்சை அளிக்கும் காட்சி
twitter

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த சில வாரங்களில் அஸ்ஸாம் மற்றும் பங்களாதேஷில் 150- க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் இறந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இந்நிலையில், கச்சார் புற்றுநோய் மருத்துவமனை வெள்ளத்தால் மூழ்கியுள்ள காட்சி அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை என்பது மிகவும் முக்கியமானது. தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டே ஆக வேண்டும் என்ற கட்டாய நிலையில் அவர்கள் இருப்பார்கள். எனவே, மருத்துவமனை வெள்ளத்தில் மூழ்கியுள்ள போதும், அங்குள்ள நோயாளிகளுக்கு தெருவில் வைத்து சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. தற்போது நோயாளிகளை இடமாற்றம் செய்ய லைஃப் ஜாக்கெட் மற்றும் படகு போன்றவற்றின் தேவை உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனை
மருத்துவமனை
twitter

``கீமோதெரபி, ஆரம்ப நிலை சோதனைகள் போன்றவை தண்ணீர் அதிகம் தேங்காத திறந்த வெளியிலேயே வைத்துச் செய்யப்படுகின்றன. அதோடு மயக்க மருந்து கொடுக்க பயன்படுத்தப்படும் நைட்ரஸ் வாயு பற்றாக்குறையால் அவரச சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மட்டும் சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. வெள்ளத்தின் பாதிப்பு அதிகமாவதற்கு முன்பு 20 சிகிச்சைகள் வரை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த வாரத்தில் வெள்ள பாதிப்பால் 4 அறுவைசிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.

முன்பு மருத்துவமனையில் உள்ள அனைத்துப் படுக்கைகளும் நிரம்பியிருந்த நிலையில், தற்போது 85 நோயாளிகள் மட்டுமே வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நோயாளிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் குடிநீர், உணவு, சமைப்பதற்கான எரிவாயுவின் தேவையும் உள்ளது" என மருத்துவமனையின் ரிசோர்ஸ் மொபிலைசேஷன் துறையின் தலைவரான ஆர்.தர்ஷனா தெரிவித்துள்ளார்.