Published:Updated:

நிவர் புயல்: தமிழகத்தில் பேருந்து சேவை நண்பகல் 12 மணிக்குத் தொடக்கம்!

மழை - பேருந்து
மழை - பேருந்து ( ராகேஷ் பெ )

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை நண்பகல் 12 மணிக்குத் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல், வலுவிழந்து தீவிரப் புயலாக புதுச்சேரிக்கு வடக்கே கரையைக் கடந்தது. நேற்று இரவு 11:30 மணி முதல் இன்று அதிகாலை 2:30 மணி வரை புயல் கரையைக் கடந்தது. புதுச்சேரியிலிருந்து வடக்கே 50 கி.மீ தூரத்தில் நிலப்பகுதியில் பயணித்துக்கொண்டிருக்கும் நிவர் தீவிரப் புயல், மூன்று மணி நேரத்தில் வலுவிழந்து சாதாரணப் புயலாக மாறும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.

மழை - பேருந்து
மழை - பேருந்து

இதனால், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

நிலப் பகுதியில் நிவர் புயல்; 6 மணிநேரத்துக்குத் தாக்கம்! - 4 மாவட்டங்களில் மிகக் கனமழை

இந்தநிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடந்த 24-ம் தேதி மதியம் 1 மணி முதல் தமிழகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து சேவை இன்று (நவம்பர் 26) நண்பகல் 12 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மழை - பேருந்து
மழை - பேருந்து

முன்னதாக, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்குள்ளும் 24.11.2020 மதியம் 1 மணி முதல் பேருந்துப் போக்குவரத்து மறு உத்தரவு வரும்வரை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நிவர் புயல் கரையைக் கடந்திருக்கும் நிலையில், மாவட்டங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து சேவை தொடங்கப்படவிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு