Published:Updated:

1992-ஐ நினைவுபடுத்தும் தொடர் மழை; நிரம்பி வழியும் அணைகள் - நெல்லையைச் சூழ்ந்துள்ள வெள்ள அபாயம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அணைகள் நிரம்பியதால் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம்
அணைகள் நிரம்பியதால் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம்

நெல்லை மாவட்டத்தில் பெய்யும் அடைமழை காரணமாக அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. அதனால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர் வந்திருக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஐந்து நாள்களாகத் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. அதனால் மாவட்டத்திலுள்ள பிரதான அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன.

வீடுகளைச் சூழ்ந்துள்ள வெள்ளம்
வீடுகளைச் சூழ்ந்துள்ள வெள்ளம்

அணைகள் நிரம்பிவிட்ட நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் விடாமல் மழை பெய்துவருகிறது. அதனால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், அணையிலிருந்து உபரிநீர் முழுமையாக வெளியேற்றப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் அணைகள் அமைந்திருக்கும் பகுதியில் மழை நீடிப்பதால் அணைகளுக்குத் தண்ணீர் அதிகமாக வந்துகொண்டிருக்கிறது. மணிமுத்தாறு, மாஞ்சோலை, ஊத்து குதிரைவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த வெள்ளம்
குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த வெள்ளம்

மழையின் காரணமாக மாஞ்சோலை சாலையில் மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது. அதனால், மாஞ்சோலைக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் உணவுப் பொருள்களை வாங்குவதற்குக்கூட சமவெளிப் பகுதிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாஞ்சோலைப் பகுதியில் 34 செ.மீ மழையும், ஊத்து பகுதியில் 51 செ.மீ மழையும் இன்றைய நிலவரப்படி பதிவாகியிருக்கிறது. அதனால் மணிமுத்தாறு அணைக்கு வரும் தண்ணீரின் அளவு கட்டுக்கடங்காத நிலையில் இருக்கிறது. அதனால் மணிமுத்தாறு அணையிலிருந்து 25,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது.

நெல்லை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன்
நெல்லை மாவட்ட எஸ்.பி மணிவண்ணன்

இது தவிர, பாபநாசம் அணையிலிருந்தும் கூடுதலாகத் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதியில் மழை நிற்காததால், உபரி நீரை அணைகள் வெளியேற்றுவது அதிகரிக்கும். அதனால் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், ஆற்றின் கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி என்பது என்ன... இன்னும் எத்தனை நாள்களுக்கு மழை?

நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தவிர,தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 50 பேர் கொண்ட இரு குழுக்கள் நெல்லை மாவட்டத்தில் முகாமிட்டு மீட்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றன.

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தீயணைப்புத் துறையினர்
வெள்ளம் சூழ்ந்த பகுதியில் தீயணைப்புத் துறையினர்

அணைப் பகுதியில் தொடர்ச்சியாகப் பெய்யும் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அதிகரிக்கும் ஆபத்து இருக்கிறது. கடந்த 1992-ம் ஆண்டு பெருமழையின்போது நெல்லை மாநகரம் வெள்ளத்தால் சூழப்பட்டது போன்ற நிலை உருவாகிவிடுமோ என்கிற அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

வெள்ளத்தில் மலைப் பகுதியிலிருந்து மலைப் பாம்புகள் அடித்துவரப்படுகின்றன. அதனால், ஆற்றின் அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் மலைப்பாம்புகள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. இதுவும் பொதுமக்களை அச்சமடைய வைத்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு