Published:Updated:

மாண்டஸ் புயல் எதிரொலி: அதிகரிக்கும் நீர்வரத்து; திறக்கப்படும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள்!

மாண்டஸ் புயல் ஏரிகளில் நீர் திறப்பு

மாண்டஸ் புயல் காரணமாகச் சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக ஏரிகளில் உபரிநீர் திறக்கப்படவிருக்கிறது.

மாண்டஸ் புயல் எதிரொலி: அதிகரிக்கும் நீர்வரத்து; திறக்கப்படும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள்!

மாண்டஸ் புயல் காரணமாகச் சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் தொடர்மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக ஏரிகளில் உபரிநீர் திறக்கப்படவிருக்கிறது.

Published:Updated:
மாண்டஸ் புயல் ஏரிகளில் நீர் திறப்பு

தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 'மாண்டஸ்' புயலாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இன்று காலை நிலவரப்படி, சென்னைக்கு 270 தென்கிழக்கே கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி மாண்டஸ் புயலின் வேகம் மணிக்கு 13 கி.மீ-ஆக இருக்கிறது.

மாண்டஸ் புயல்
மாண்டஸ் புயல்

புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகில் கரையைக் கடக்க வாய்ப்பிருக்கிறது. தீவிரப் புயலாக நகரும் மாண்டஸ் புயல், இன்னும் மூன்று மணி நேரத்தில் வலு குறைந்த புயலாக மாறும். புயல் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயல் கரையைக் கடக்கும்போது, 85 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

புயல் காரணமாக, சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்மழை பெய்துவருகிறது. மேலும், கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை தமிழகத்திலுள்ள 24 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. சென்னையின் முக்கியக் குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து இன்று மதியம் 12 மணியளவில் உபரிநீர் திறந்துவிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி

சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்திருக்கிறது. உதாரணமாக, தற்போதைய நிலையில் புழல் ஏரிக்கு விநாடிக்கு 140 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளிலிருந்து 100 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மேலும், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.