Published:Updated:

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் பீதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை ( Twitter )

ஜப்பானில் இன்று மதியம் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6:09 மணியளவில் வடகிழக்கு ஜப்பானில் உள்ள மியாகி ப்ரிஃபெக்சர் (Miyagi Prefecture) பகுதியில் 7.2 ரிக்டர் அளவிற்கான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அந்த நிலநடுக்கமானது 60 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மையப்பகுதியிலிருந்து 400 கி.மீ தெற்கே இந்த நிலநடுக்கத்தை உணர முடிந்ததாகக் கூறப்படுகிறது.

சுனாமி எச்சரிக்கை
சுனாமி எச்சரிக்கை
Twitter

நிலநடுக்கத்தை அடுத்து டோஹோகு எலக்ட்ரிக் பவர் நிறுவனம் (Tohoku Electric Power Co) ஒனகாவா (Onagawa) அணுமின் நிலையத்தின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தியதுடன், அங்குள்ள அணு உலைகளில் எதுவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று ஆராயப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து மியாகி கடற்கரை பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடற்கரை பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம்தான் இதே கிழக்கு கடலோர பகுதியில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், அப்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011-ம் ஆண்டு இந்த பகுதியில் ஒரு மிகப் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அங்கிருந்த புகுஷிமா டாய்-இச்சி (Fukushima Dai-ichi) அணுமின் நிலையத்தில் விபத்தும் ஏற்பட்டது. இதில், 18,000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். பலர் காணாமல் போயுள்ளனர். இந்த கோர சம்பவத்தின் பத்தாம் ஆண்டு நினைவு தினம் ஒரு சில தினங்களுக்கு முன்னர் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு