Published:Updated:

`அவலாஞ்சியில் மீண்டும் கொட்டித்தீர்க்கும் பெருமழை' - ஒரே நாளில் 1,816 மி.மீ பதிவு

நீலகிரி மழை
News
நீலகிரி மழை

நீலகிரியில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த ஆண்டைப்போலவே அவலாஞ்சி, அப்பர்பவானி பகுதிகளில் பெருமழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்து மூன்றாவது நாளாகத் தொடர் மழை பெய்து வருகிறது. நீலகிரியில் பெரு மழை பெய்யக்கூடும் என ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் நீலகிரியில் உள்ள 60 தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

நீலகிரி
நீலகிரி

மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக அப்பர்பவானியில் 308 மி.மீ, அவலாஞ்சியில் 220 மி.மீ, கூடலூரில் 201 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் ஒரே நாளில் மொத்தம் 1,816 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தப் பெருமழை காரணமாக தேவாலா பொன்னானி ஆற்றின் தடுப்புச் சுவரில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கூடலூர் காலம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புறமனவயல் பழங்குடியின கிராமம் வெள்ளநீரில் மூழ்கி வருகிறது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 50 பழங்குடியின மக்களை வருவாய்த்துறையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். புறமனவயல் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறிவருகிறது.

நீலகிரி
நீலகிரி

பைக்காரா உள்ளிட்ட ஒரு சில இடங்களில் சாலைகளில் மரம் விழுந்துள்ளதால், உடனடியாக அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண் சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மின் கம்பங்களில் மரங்கள் வீழ்ந்துள்ளதால், பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளன. மழைக் காரணமாக கடுமையான குளிரும் நிலவி வருகிறது.