Published:Updated:

`இரண்டாவது நாளாக அவலாஞ்சியில் கொட்டித்தீர்த்த பெருமழை!’ - ஒரு நாளில் 390 மி.மீ பதிவு

நீலகிரி கனமழை
நீலகிரி கனமழை

`வரும் 8-ம் தேதி வரை அதிகளவு மழை பெய்யும் என எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டு பெய்த அதே பகுதிகளில் அதே அளவு மழை பெய்யலாம் என அதிதீவிர முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறோம்.’

நான்காவது நாளாக நீலகிரி மாவட்டத்தில் இன்றும் இடைவிடாது பலத்த காற்றுடன் பெருமழை பெய்து வருகிறது.

நீலகிரி கனமழை
நீலகிரி கனமழை

இன்று காலை நிலவரப்படி நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 390 மி.மீ, அப்பர்பவானியில் 306 மி.மீ, பந்தலூர் 161 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 2,241 மழை பதிவாகியுள்ளது.

இந்தப் பெருமழை காரணமாக மாவட்டத்தில் ஊட்டி, மஞ்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளிலிலும் குடியிருப்புகள் மீதும் மரங்கள் விழுந்துள்ளன. அவற்றை அகற்றும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி கனமழை
நீலகிரி கனமழை

மேலும், மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததில் மின் துண்டிப்பு ஏற்பட்டு பல கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.

`10 ஆண்டுகளுக்குப் பிறகான துயரம் இது!' - துண்டிக்கப்பட்ட அவலாஞ்சி; ஊட்டியைப் புரட்டிப்போட்ட மழை

மண்சரிவு மற்றும் வெள்ளநீர் சூழும் அபாயம் உள்ள 200-க்கும் அதிகமான பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளில் இருந்த மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவு
நிலச்சரிவு

இதற்காக, சுமார் 300-க்கும் அதிகமான பள்ளிகள் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. தற்போதுவரை 500 பேர் வரை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பைக்காரா, குந்தா, அப்பர்பவானி, காட்டேரி உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குந்தா அணை இரண்டாவது நாளாகத் திறக்கப்பட்டுள்ளது. கேத்தி பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்ததில், மலைக்காய்கறி விளைநிலங்கள் நீரில் மூழ்கின.

நீலகிரி கனமழை
நீலகிரி கனமழை

இடைவிடாத மழையிலும் மாவட்டம் முழுக்க போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 நீலகிரி: `பொன்னானி ஆற்றின் தடுப்பு சுவரில் உடைப்பு!’ - தீவிரமடையும் பருவ மழை

மீட்புப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ``வரும் 8-ம் தேதி வரை அதிகளவு மழை பெய்யும் என எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டு பெய்த அதே பகுதிகளில் அதே அளவு மழை பெய்யலாம் என அதிதீவிர முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறோம்.

மீட்புப் பணிகள்
மீட்புப் பணிகள்

மிகக் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு