Election bannerElection banner
Published:Updated:

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்

சென்னை கனமழை
சென்னை கனமழை

தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்துவருகிறது.

சென்னை கனமழை
சென்னை கனமழை

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் ஏரியிகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படவிருக்கிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரம் தமிழகத்தின் ஏழு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்திருக்கிறார். ``சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடியுடன்கூடிய கனமழை பெய்யக்கூடும்" என்று அவர் கூறினார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்துவரும் மழை ஆறு மணிநேரத்துக்கு நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

தொடர்ந்து பேசிய அவர், ``கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் லேசானது வரை மழை பெய்யக்கூடும். நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, நீலகிரி, கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல எச்சரிக்கை எதுவும் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை, செங்கல்பட்டு, மதுராந்தகம் பகுதிகளில் தலா 6 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. தரமணி, கேளம்பாக்கம், அண்ணா பல்கலைக்கழகம், திண்டிவனம் பகுதிகளில் 5 செ.மீ மழைப் பதிவாகியிருக்கிறது" என்று தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு