Published:Updated:

`மீட்புப் பணியில் சில சின்னங்கள்; கோஷங்கள்!' - எச்சரிக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன்

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் எம்.பி-யுமான ராகுல் காந்தி இன்று வயநாடு செல்கிறார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவை கடந்த ஆண்டு புரட்டிப்போட்ட மழையை யாரும் மறந்திருக்க முடியாது. கடவுளின் தேசமாகக் கொண்டாடப்படும் கேரளத்தின் 11 மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியது பெரு மழை. அந்த மழை ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தது அம்மாநிலம்.

கேரள மீட்பு பணி
கேரள மீட்பு பணி
AP

இந்நிலையில் தற்போது மீண்டும் மழையின் காரணமாகப் பெரும் அழிவுகளைச் சந்துத்து வருகிறது கேரளா. ஒரு வருடத்துக்குள் இரண்டாவது பெரும் பாதிப்பில் இருந்து மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

பல இடங்கள் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாகப் பலி எண்ணிக்கை குறித்த அச்சம் தொடர்ந்து காணப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி கேரளாவில் மழைக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 68-ஆக உள்ளது. இந்த முறை வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்கள் பெரும் சேதங்களைச் சந்தித்துள்ளன.

கேரளா
கேரளா
Twitte\@CentralIfs

``இது வரை 1,550 நிவாரண முகாம்களில் சுமார் 2.25 லட்சம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் மீட்புப் பணிகளில்தான் அனைவரது கவனமும் இருக்க வேண்டும். இதில் அரசியல் அறவே கூடாது எனக் கண்டித்திருக்கிறார்.

``இது போன்ற பேரழிவின்போது அரசியல் விருப்பங்களை வெளிக்காட்டக் கூடாது. மீட்புப் பணியின்போது தாங்கள் சார்ந்திருக்கும் இயக்கங்களின் சின்னங்களை டி சர்ட்டில் ஒட்டிக்கொள்வது, சில கோஷங்கள் எழுப்புவது போன்றவை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய சமூக ஜனநாயகக் கட்சி, இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு, சேவா பாரதி முதலிய அமைப்புகளின் கொடிகளை டி-சர்ட்டில் காணமுடிகிறது” என்றார்.

இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் எம்.பி-யுமான ராகுல் காந்தி இன்று வயநாடு செல்கிறார். இன்னும் சில நாள்கள் அங்கு தங்கி இருப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், ``அடுத்த சில நாள்கள் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள எனது மக்களவைத் தொகுதியான வயநாட்டில் இருப்பேன். அங்கு இருக்கும் நிவாரண முகாம்களைப் பார்வையிட்டு மீட்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தற்போது ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு - புத்துமலை எஸ்டேட் பகுதியில் 100 பேர் பலி?