Published:Updated:

மூணாறு நிலச்சரிவு: 142 தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் மீட்பு! - சீரமைப்புப் பணிகள் தீவிரம்

நிலச்சரிவு

மூணாறு வட்டவடை சாலையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாலும், மரங்கள் சாய்ந்துள்ளதாலும் அப்பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. சாலையைச் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

மூணாறு நிலச்சரிவு: 142 தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் மீட்பு! - சீரமைப்புப் பணிகள் தீவிரம்

மூணாறு வட்டவடை சாலையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாலும், மரங்கள் சாய்ந்துள்ளதாலும் அப்பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. சாலையைச் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Published:Updated:
நிலச்சரிவு

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, இடுக்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மழைநீரில் மூழ்கின. இதனால் கடந்த 2018-ல் ஏற்பட்ட மழை பாதிப்பைப்போல பேரழிவை நினைவுகூரும் வகையில் மழை அதிகமாக இருந்துவருகிறது.

நிலச்சரிவு
நிலச்சரிவு

இடுக்கியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மழை குறைந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் மழை அதிகமாக பெய்யத் தொடங்கியது. அதிகபட்சமாக பீர்மேடு தாலுகாவில் 140 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இந்நிலையில் நேற்று 24 மணி நேரத்தில் சராசரியாக 98.64 மில்லிமீட்டர் மழை பெய்தது. இடுக்கியில் மட்டும் 157.2 மில்லிமீட்டர் மழையும், தேவிகுளத்தில் 146.4 மில்லிமீட்டர் மழையும், பீர்மேடு பகுதியில் 113.4 மில்லிமீட்டர் மழையும் பதிவானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிலச்சரிவு
நிலச்சரிவு

நேற்று நள்ளிரவு மூணாறு டவுனிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலுள்ள டாப் ஸ்டேஷன் வட்டவடை குண்டலை எஸ்டேட் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு விநாயகர் கோயில், மூன்று டீக்கடைகள், இரண்டு ஆட்டோக்கள் மண்ணில் புதைந்தன. அங்கிருந்த 142 தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 15 குடும்பங்கள் குண்டளை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செண்டுவாரா முகாமுக்கு, பேரிடர் மீட்புக்குழுவால் அழைத்துச் செல்லப்பட்டனர். மீதமுள்ள 127 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களிலுள்ள அவர்கலின் உறவினர் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த நிலச்சரிவில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மூணாறு பகுதியைச் சேர்ந்த பேரிடர் மீட்புக்குழு தன்னார்வலர் செந்தில் குமாரிடம் பேசினோம். ``தேவிகுளம், மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் தன்னார்வலர்களால் அமைக்கப்பட்டுள்ள மீட்புக்குழு தயார் நிலையில் இருக்கிறது. அதேபோல போலீஸார், தீயணைப்புத்துறையினர், மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். நிலச்சரிவு, வெள்ளத்தில் பாதிக்கப்படுவோரை மீட்டு தங்கவைப்பதற்காக மூணாறில் மட்டும் நான்க்லு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல ஊராட்சிவாரியாகவும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பருவமழைக் காலத்தைக் கருத்தில்கொண்டு நீர்நிலைகள், நீர்வரத்துப் பாதைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டிருந்ததால் நீர்வரத்துப் பாதையிலிருந்து தண்ணீர் வெளியேறவில்லை.

நிலச்சரிவு
நிலச்சரிவு

ஆனால் அதிமாக மரங்கள் வெட்டப்பட்டு எஸ்டேட்டுகளும், கட்டடங்களும் உருவானதுதான் நிலச்சரிவுக்குக் காரணமாக உள்ளது. மரங்கள் அடர்த்தியாக இருந்தால் அதன் வேர்கள் மண்ணை இறுகப்பிடித்துக்கொள்வதால் நிலச்சரிவு ஏற்படாமல் இருக்கும். தனியார் எஸ்டேட் பகுதியில் நேற்று நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் எப்போதும் ஒரு சிறு அருவியில் தண்ணீர் வந்துகொண்டே இருக்கும். டாப் ஸ்டேஷனிலிருந்து மழைநீர் அதிகமாக வந்ததால், மலையின் கீழ்ப்பகுதியில் பிடிமானம் இல்லாததால் மலையின் மேலிருக்கும் மரங்கள் மண்ணுடன் சேர்ந்து சரிந்துள்ளன. எனவே யூகலிப்டஸ் மரங்களைத் தவிர பிற மரங்கள் வெட்டப்படுவதைத் தவிர்ப்பது இது போன்ற நிலச்சரிவு ஏற்படுவதை தடுக்கும்” என்றார்.

மூணாறு வட்டவடை சாலையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டிருப்பதாலும், மரங்கள் சாய்ந்திருப்பதாலும் அந்தப் பகுதிகளில் போக்குவரத்தும் முற்றிலும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. சாலையைச் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

நிலச்சரிவு
நிலச்சரிவு

இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணையில் நீர் திறக்கப்பட்டிருப்பதால், இடுக்கி அணைக்குச் செல்லும் நீர்வழிப் பாதையான வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, சப்பாத்து, உப்புதரா, ஐயப்பன் கோயில் ஆகிய கரையோரப் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருக்கிறது.