Published:Updated:

மூணாறில் மண்சரிவு; சுற்றுலாப் பகுதிகள் மூடல் - தொடர் கனமழைக்கு 5 பேர் பலி!

மண்சரிவு

தொடர்மழை காரணமாக மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதால், இரவு 8 மணி முதல் காலை 6 மணி போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மூணாறில் மண்சரிவு; சுற்றுலாப் பகுதிகள் மூடல் - தொடர் கனமழைக்கு 5 பேர் பலி!

தொடர்மழை காரணமாக மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதால், இரவு 8 மணி முதல் காலை 6 மணி போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
மண்சரிவு

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவருகிறது. இதனால் மலைப்பகுதிகளில் ஈரப்பதம் அதிகரித்து நிலச்சரிவு ஏற்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. இடுக்கி மாவட்டத்தில் கனமழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்தது.

மழையால் சாய்ந்த மின்கம்பம்
மழையால் சாய்ந்த மின்கம்பம்

கடந்த வாரம் பெய்த தொடர்மழையில் ஏலப்பாறை அருகே கோழிக்கானம் ஏலத்தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பின் மீது மண் சரிந்ததில் வீட்டினுள் சமையல் வேலை செய்துகொண்டிருந்த பாக்கியம் (58) இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். இதேபோல மூணாறு அருகே வெள்ளத்தூவல் முதுவான்குடியில் கட்டுமானப் பணி நடந்துகொண்டிருந்த பகுதியில் மண்திட்டு விழுந்ததில் பவுலோஸ் (56) என்பவர் உயிரிழந்தார். அடிமாலி அருகே மச்சிப்பிளாவ் பகுதியைச் சேர்ந்த அகில் (22) ஆற்றோரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நெடுங்கண்டம் அருகே பாறைதோடு, காஞ்சியாறு பகுதிகளில் மரம் சாய்ந்தும், மண்சரிந்தும் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளன. இதேபோல உடும்பன்சோலை தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து தோட்டத் தொழிலாளர்களான லெட்சுமி (63), முத்துலட்சுமி (50), சோமு சக்ரா (30) ஆகியோர் பலியாகினர். மின்கம்பங்களில் மரங்கள் சாய்ந்து மின்கம்பிகளில் விழுந்ததால் பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மேலும் 10-க்கும் மேற்பட்ட வீடுகளும் வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

மண்சரிவு
மண்சரிவு

மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் கலெக்டர் அலுவலகம், தேவிகுளம், உடும்பன்சோலை, பீர்மேடு, இடுக்கி, தொடுபுழா தாலுகா அலுவலகங்களிலும் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டு மீட்புப்பணிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நேற்று, மறு உத்தரவு வரும் வரை ஏலத்தோட்டப் பணிகளை நிறுத்திவைக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்கிடையே தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளில் பாதுகாப்பை உறுதிசெய்ய அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர். கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கியச் சாலைகளில் பாறைகள் உருண்டு விழுவதாலும், மரங்கள் ரோட்டில் சாய்வதாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுவருகிறது.

சேதமடைந்த சாலை
சேதமடைந்த சாலை

நேற்று கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அரசு தாவரவியல் பூங்கா அருகே மண்சரிவு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியைச் சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதே பகுதியில் ரோட்டில் பாறைகள் சாலையில் உருண்டன. மூணாறு போலீஸ் ஸ்டேஷன் அருகேயும் மண் சரிவு ஏற்பட்டது.

வீட்டில் சாய்ந்த மரம்
வீட்டில் சாய்ந்த மரம்

தொடர்மழை நீடிப்பதால் இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்திருக்கிறது. மூணாறில் மட்டும் நேற்று 130 மில்லிமீட்டர் மழை பதிவானது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. தொடர்மழை காரணமாக மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதால், இரவு 8 மணி முதல் காலை 6 மணி போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல மூணாறு உட்பட மாவட்டத்திலுள்ள அட்வென்ஜர் சுற்றுலா, படகுச் சவாரி, சாகச ஜீப் சவாரி நிறுத்தப்பட்டிருக்கிறது.