Published:Updated:

உத்தரகாண்ட்: தவுலிகங்கா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு - மீட்புப் பணியில் பாதுகாப்புப் படை வீரர்கள்!

தகவலறிந்த பின்னர் சமோலி மாவட்ட நிர்வாக அதிகாரிகளும், போலீஸ் உயரதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கிறார்கள்.

உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டம், தபோவனம் பகுதியிலுள்ள ரெய்னி கிராமத்தில் பாய்ந்துவரும் தவுலிகங்கா நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அதிக அளவிலான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், அங்கே பதற்றமான சூழல் உருவாகியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து காவல்துறையினரும், மாநிலப் பேரிடர் மீட்புக்குழுவினரும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அங்கு வசித்துவந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுவருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தகவலறிந்த பின்னர் சமோலி மாவட்ட நிர்வாகிகளும், போலீஸ் உயரதிகாரிகளும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கிறார்கள். ``சமோலி மாவட்டத்திலுள்ள தவுலிகங்கா நதியில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்குக்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை மாவட்ட நிர்வாகத்தினரும், காவல்துறையினரும் துரிதமாகச் செயல்படுத்த வேண்டும். அதேநேரத்தில் இது குறித்து வெளிவரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு