Published:Updated:

உருவாகும் புயல்... அதி கனமழை எச்சரிக்கை விடுத்திருக்கும் வானிலை ஆய்வு மையம்!

உருவாகும் புயல்... அதி கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் புயல் உருவாகும் என்று கூறப்படும் நிலையில், வரும் 8-ம் தேதி சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

உருவாகும் புயல்... அதி கனமழை எச்சரிக்கை விடுத்திருக்கும் வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் புயல் உருவாகும் என்று கூறப்படும் நிலையில், வரும் 8-ம் தேதி சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

Published:Updated:
உருவாகும் புயல்... அதி கனமழை எச்சரிக்கை

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருக்கிறது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 6-ம் தேதி மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். பிறகு மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து டிசம்பர் 8-ம் தேதி காலை வடதமிழகம்-புதுவை மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளின் அருகில் வந்தடையக்கூடும்.

சென்னை மழை
சென்னை மழை

இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும். வரும் 7-ம் தேதியைப் பொறுத்தவரை, தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் மழை குறைந்தாலும், அதற்குப் பிறகு தமிழகத்தில் அதிக மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது என கணிக்கப்படுகிறது. அந்தமான் பகுதிக்கு வந்திருக்கும் காற்று சுழற்சி, இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும். 6-ம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், 7-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறி, பின்னர் அது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப் புயலாக மாறினால் அந்த புயலுக்கு ‘மாண்டஸ் ’என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

சென்னை மழை
சென்னை மழை

இது முதலில் மேற்கு நோக்கி நகர்ந்து வந்து, வட இலங்கையை நெருங்கி வந்து தரைக்காற்றைக் கடல் பகுதியை நோக்கி இழுக்கும். இது புயலாகக் கரையைக் கடக்கும் வாய்ப்பு குறைவு, தரைப் பகுதியில் இருக்கும் காற்றை இழுக்கும் நிலையில் வலுவிழந்து, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி கரையைக் கடக்கும். அதற்கு முன்னதாக கடலில் இரண்டு நாள்கள் அந்தப் புயல் நிலைகொண்டு தமிழகத்துக்கு மிக கனமழையைக் கொடுக்கலாம்.

7-ம் தேதி வட இலங்கைப் பகுதியில் மிக கனமழை பெய்யும். அதேபோல, டிசம்பர் 8-ம் தேதி, தமிழகத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். கடலில் மாண்டஸ் புயல் நிலைகொண்டிருந்தாலும், தரைக் காற்றின் காரணமாகத் தரைப் பகுதிக்கு நெருங்கி வந்து செயலிழந்து காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும். அதற்குப் பிறகுதான் கரையைக் கடக்கும். இதனால், தரைப் பகுதியில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

சென்னை மழை
சென்னை மழை
வி.ஸ்ரீனிவாசலு

இது, மயிலாடுதுறை - திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இடையில் கரையைக் கடக்கும் என கணிக்கப்படுகிறது. நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, கொடைக்கானல், வால்பாறை பகுதிகளில் கனமழை பெய்யும். இந்தப் புயல் கரையைக் கடப்பதற்கு முன்பு தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களின் வடக்குப் பகுதியில் வலுவான மழையைக் கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. வலுவிழந்து தரைப் பகுதிக்கு வந்த பிறகு தெற்கு கர்நாடகா, தமிழகத்தின் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திரா பகுதி வழியாக அரபிக்கடல் பகுதிக்கு மெல்லக் கடந்து செல்லும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.